5 பேரிடம் கைமாறிய தலைவன் தலைவி!.. காசு கொட்டுதே.. மிஸ் பண்ணிட்டாங்களே..

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கி விஜய் சேதுபதி, நித்யா மேனன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து கடந்த வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படம் தலைவன் தலைவி. கணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் ஊடல்,கூடல் பற்றிய கதை இது.
இப்படத்தின் பொட்டல முட்டாயே பாடல் ஏற்கனவே யுடியூப்பில் வெளியாகி ஏகப்பட்ட வியூஸ்களை பெற்று ட்ரென்டிங்கில் உள்ளது. இந்த பாடலே படத்திற்கு புரமோஷனாக அமைந்து ரசிகர்களை தியேட்டர்களுக்கு இழுத்து வந்தது. படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்தாலும் படம் முழுக்க கத்திக் கொண்டே இருக்கிறார்கள் என்கிற நெகட்டிவ் விமர்சனமும் வந்தது.

ஆனாலும் இந்த படம் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த படங்களில் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படமே அந்த நிறுவனத்திற்கு அதிக லாபத்தை கொடுத்தது. அந்த வரிசையில் தலைவன் தலைவி படமும் சேர்ந்திருக்கிறது. இந்நிலையில் இந்த படம் பல தயாரிப்பு நிறுவனங்களுக்கு சென்று டேக் ஆப் ஆகாமல் போன கதை பற்றி பார்ப்போம்.
முதலில் இந்த படத்தின் கதை மாஸ்டர்,லியோ படங்களின் தயாரிப்பாளர் லலித்குமாரிடம் சென்றது. சில காரணங்களால் அது நடக்கவில்லை. அடுத்து சக்தி பிலிம்ஸ் ஃபேக்டரி நிறுவனத்திடம் சென்றது. அதுவும் டேக் ஆப் ஆகவில்லை. அடுத்து ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு சென்றது. அதுவும் நடக்காமல் போக ஜெயம் ரவியின் முன்னாள் மாமியார் சுஜாதாவிடம் போனது. அதில் ஜெயம் ரவி ஹிரோவாக நடிப்பதாக இருந்து அதுவும் நடக்கவில்லை. அதன்பின் சூரியின் மேனேஜரிடம் சென்று அதுவும் நடக்காமல் கடைசியாகத்தான் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் கைக்கு சென்றது. இந்த படம் நல்ல வசூலை பெற்று வருவதால் மிஸ் பண்ணிய தயாரிப்பாளர்கள் புலம்பி வருகிறார்களாம்.