இந்தியன் 3-க்கு உயிர் கொடுத்த ரஜினி!.. இவர் சொன்னா கமல் கேட்பாரா?!...

Indian3: தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என பெயரெடுத்தவர் ஷங்கர். அதற்கு காரணம் மிகவும் அதிக பட்ஜெட்டில் படங்களை எடுப்பார். ஜீன்ஸ் படத்தில் ஒரே பாடலில் உலகின் 7 அதிசயங்களையும் காட்டினார். இவரின் படம் என்றாலே ரிச்சாக தெரியும். பணத்தை கொட்டி படமெடுப்பார். ஒரு பாடலுக்கே சில கோடிகள் செலவு செய்வார்.
படம் வெற்றியா தோல்வியா?.. தயாரிப்பாளருக்கு லாபமா?. நஷ்டமா?. எதையும் பார்க்கமாட்டார். மீண்டும் வேறு தயாரிப்பாளர், வேறு ஹீரோ, பெரிய பட்ஜெட்டில் படம் என துவங்கிவிடுவார். இவரால் நஷ்டப்பட்ட பல தயாரிப்பாளர்கள் கோலிவுட்டில் இருக்கிறார்கள். ஐ படத்திற்கு பின் ஆஸ்கர் ரவிச்சந்திரன் படமே எடுக்கவில்லை. இந்தியன் 2 கொடுத்த அடியில் லைக்கா எழவே இல்லை.

‘சரி இவங்களாம் உஷார் ஆயிட்டாங்க’ என ஆந்திரா போய் தில் ராஜூவை பிடித்து ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் என்கிற காவியத்தை எடுத்தார். அந்த படத்தில் வந்த 5 பாடல்களுக்கு மட்டுமே 75 கோடி வரை செலவு செய்தார். இதில் ஒரு பாடலுக்கு 15 கோடி செலவு செய்தார். அந்த பாடல் படத்திலேயே இல்லை. அப்படி வெளியான கேம் சேஞ்சர் பாக்ஸ் ஆபிசில் மண்ணை கவ்வியது. தயாரிப்பாளருக்கு 150 கோடி நஷ்டம், இப்போது வேள்பாரி எடுக்கப்போகிறேன் என சொல்லி வருகிறார். ஆனால், தயாரிப்பாளர் யாரும் சிக்கவில்லை.
லைக்கா தயாரிப்பில் கமலை வைத்து இவர் இயக்கிய இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், படம் வெளியானதும் ரசிகர்களுக்கு பிடிக்காமல் போனது. ஷங்கர் இன்னமும் கிரின்ச்சாகவே இருக்கிறார். அவர் தன்னை அப்டேட் செய்து கொள்ளவேண்டும் என பலரும் சொன்னார்கள். இப்படம் லைக்காவுக்கு நஷ்டத்தை கொடுத்தது. ரஜினியை நம்பி எடுத்த வேட்டையனும் பெரிய வெற்றியை பெறவில்லை. எனவே, லைக்கா சினிமா தயாரிப்பதில் இருந்து ஒதுங்கி இருக்கிறது.

இந்தியன் 2 எடுத்தபோதே இந்தியன் 3-க்கான காட்சிகளையும் ஷங்கர் எடுத்துவிட்டார். இந்தியன் 2 பிளாப் ஆகிவிட்டதால் ’கதையை மாற்ற வேண்டும். இன்னும் சில காட்சிகளை எடுக்க வேண்டும். அப்போதுதான் கால்ஷீட் கொடுப்பேன்’ என கமல் சொல்லிவிட்டார். இந்நிலையில், சமீபத்தில் வேள்பாரி நாவல் தொடர்பான விழாவில் ரஜினியும், ஷங்கரும் கலந்துகொண்டனர்.
அப்போது ‘இந்தியன் 3 என்னாச்சி?’ என ஷங்கரிடம் ரஜினி கேட்க ‘இன்னும் சில காட்சிகளை எடுக்க வேண்டும். தயாரிப்பாளர் முடியாது என்கிறார். கமலும் ஆர்வம் காட்டவில்லை’ என ஷங்கர் சொல்லியிருக்கிறார். அதைக்கேட்ட ரஜினி ‘சுபாஷ்கரன், கமல்கிட்ட நான் பேசுறேன்’ என சொல்லியிருக்கிறாராம். ரஜினி முயற்சி எடுத்து எல்லாம் சரியாக அமைந்தால் இந்தியன் 3 டேக் ஆப் ஆக வாய்ப்பிருக்கிறது.