இதுவரை வாங்காத சம்பளம்!.. விஜயை ஓவர்டேக் பண்ணும் ரஜினி!. புதுப்பட அப்டேட்!....

By :  MURUGAN
Published On 2025-07-14 11:28 IST   |   Updated On 2025-07-14 11:28:00 IST

Rajinikanth: தமிழ் சினிமாவை பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் என்கிற நம்பர் ஒன் இடம் ரஜினியிடம்தான் இருக்கிறது. கமலுக்கு கூட ரஜினி இடத்தை நம்மால பிடிக்க முடியவில்லையே என்கிற ஆதங்கம் இருக்கிறது. நாம் கஷ்டப்பட்டு நடித்தால் இவரோ ஸ்டைலை காட்டி படத்தை ஓட வைக்கிறார் என கமல் அவரின் நண்பர்கள் வட்டாரத்தில் சொல்வதுண்டு.

ஆனால், கமல் செய்ய முடியாததை விஜய் செய்தார். கடந்த 10 வருடங்களில் ரஜினியின் பல படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. பாபாவில் துவங்கி குசேலன், லிங்கா, தர்பார், அண்ணாத்த, வேட்டையன், லால் சலாம் போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிசில் தோல்வி அடைந்தன.

இந்த இடைவெளிகளில் தொடர் ஹிட் படங்களை கொடுத்து விஜய் மேலே போனார். அவரின் படங்கள் ரஜினி படங்களை விட அதிக வசூலை பெற்றது. எனவே, அவரின் சம்பளமும் பல கோடிகள் அதிகரித்தது. ரஜினியை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறினார். கோட் படத்தில் 200 கோடி சம்பளம் வாங்கிய விஜய் ஜனநாயகன் படத்திற்கு 225 கோடி வாங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.

ரஜினி இன்னமும் 150 கோடி சம்பளத்தை தாண்டவில்லை. கூலி படத்திற்கு 150 கோடி சம்பளம் வாங்கிய ரஜினி ஜெயிலர் 2-வுக்கு 200 கோடியை தாண்டி சம்பளம் கேட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில்தான் ஜெயிலர் 2-வுக்கு பின் ரஜினி நடிக்கும் புதிய படம் பற்றிய செய்தி வெளியாகியுள்ளது.


மகாராஜா படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் ஒரு படத்தில் அவர் நடிக்கவுள்ளாதகவும், இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு இதுவரை வாங்காத சம்பளத்தை ரஜினிக்கு கொடுக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் கசிந்திருக்கிறது. ஒருவேளை அவரின் சம்பளம் 250 ஆக இருந்தால் விஜயை ரஜினி ஓவர்டேக் செய்துவிட்டதாகவே கருதலாம்.

Tags:    

Similar News