சும்மா தீயா இருக்கு!. புது படத்திற்கு ரெடியாகும் ராம் சரண்!.. வைரல் போட்டோ!...

by MURUGAN |
ram charan
X

Ramcharan Peddi: தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண். சில படங்களில் நடித்திருந்தாலும் ராஜமவுலின் மஹதீரா படம் இவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. அப்பாவை போல காதல் கலந்த ஆக்‌ஷன் படங்களில் நடிப்பது இவரின் ஸ்டைல். அதேநேரம் சுகுமார் போன்ற இயக்குனரின் ரங்கஸ்தலம் போன்ற படங்களிலும் நடித்து தான் ஒரு சிறந்த நடிகர் என நிரூபித்தார்.

ஆந்திராவில் இவருக்கென பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. நிறைய ஆக்‌ஷன் படங்களில் நடித்து பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டார். ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆரோடு இணைந்து இவர் நடித்து வெளியான ஆர்.ஆர்.ஆர் படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் ராம் சரண் சிறப்பான நடிப்பையும் வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த படத்தில் ராம்சரணும், ஜூனியர் என்.டி.ஆரும் இணைந்து ஆடிய நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதையும் பெற்றது. ஆந்திரா சினிமாவுக்கு முதன் முதலில் கிடைத்த ஆஸ்கர் விருது இது. அதேநேரம், இந்த படத்திற்கு பின் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்த கேம் சேஞ்சர் படம் பாக்ஸ் ஆபிசில் படு தோல்வி அடைந்தது.

இந்த கதையின் ஒன்லைனை கார்த்திக் சுப்பாராஜ் சொல்ல ஷங்கர் திரைக்கதை அமைத்து இயக்கியிருந்தார். வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜூ இப்படத்தை மிகவும் அதிக செலவு செய்து உருவாக்கினார். இந்த படத்தில் இடம் பெற்ற பாடல் காட்சிகளுக்கே ஷங்கர் 75 கோடிக்கும் மேல் செலவு செய்தார். இந்த படம் தில் ராஜுக்கு பல கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியது.


ராம் சரண் இப்போது தேசிய விருது பெற்ற புச்சி பாபு இயக்கத்தில் பெத்தி என்கிற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் சிவ்ராஜ்குமார், ஜான்வி கபூர் உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் கதை கிரிக்கெட்டை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படவுள்ளது. அடுத்த வருடம் மார்ச் மாதம் இப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இந்த படத்திற்காக வித்தியாசமான லுக்கில் ராம் சரண் வொர்க் அவுட் செய்யும் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story