வீட்டை இடிக்கப் போகும் சிவகார்த்திகேயன்!.. பின்னணியில் உள்ள ஸ்டோரி இதுதான்!...

Sivkarthikeyan: அமரன் படத்தின் வெற்றி சிவகார்த்திகேயனை மொத்தமாக மாற்றிவிட்டது. அதற்கு முன் 40 கோடி சம்பளம் வாங்கியவர் அமரன் ஹிட்டுக்கு பின் 70 கோடி சம்பளம் கேட்கிறார். ஏனெனில் அந்த படம் 300 கோடியை தாண்டி வசூல் செய்துவிட்டது. எனவே, இனிமேல் ஒரே மாதிரி காதல் கலந்த காமெடி படங்களில் நடிக்கக் கூடாது. நல்ல சீரியஸான கதைகளிலும், பெரிய இயக்குனர்களின் படங்களிலும் நடிக்க வேண்டும் என அவர் திட்டமிட்டிருக்கிறார்.
அதனால்தான் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்திலும், சுதா கொங்கராவின் இயக்கத்தில் பராசக்தி படத்திலும் கமிட் ஆனார். இத்தனைக்கு இந்த இரண்டு படங்களிலும் அவரே வலிய சென்று வாய்ப்பு கேட்டு நடித்தார். சுதாகொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க புறநானூறு என்கிற படம் துவங்குவதாக இருந்தது. இது 1960களில் தமிழகத்தில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போரட்டம் பற்றிய கதை. எனவே, இதில் சூர்யா நடிக்கவில்லை. அதன்பின் அந்த படத்திற்கு பராசக்தி என தலைப்பு மாற்றப்பட்டு சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் ஜெயம் ரவி, அதர்வா போன்றவர்களும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் மதராஸி படம் ஒரு பக்கா ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் 2 கெட்டப்பில் நடிக்கிறார். சமீபத்தில் முறுக்கு மீசை லுக்குக்கு அவர் மாறியது கூட மதராஸி படத்திற்காகத்தான் என சொல்கிறார்கள்.

இந்த இரண்டு படங்களுக்கு பின்னர் டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். முதலில் சிபி சக்ரவர்த்தி பெயர் அடிபட்டு அதன்பின்னர் வெங்கட் பிரபு, குட் நைட் பட இயக்குனர் வினாயக் சந்திரசேகர் ஆகியோரின் பெயர்களும் சொல்லப்பட்டு இப்போது சிபி சக்ரவர்த்தியே உறுதி செய்யப்பட்டிருக்கிறார்.
சிவகார்த்திகேயன் இப்போது பனையூரில் வசித்து வருகிறார். இந்த வீட்டை இடித்துவிட்டு ஒரு பெரிய பங்களாவை கட்டும் முடிவில் இருக்கிறார். ஆனால், அதுவரை தங்குவதற்கு வீடு என்பதால் கிழக்கு கடற்கரை சாலையில் தயாரிப்பாளர் போனிகபூருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு சில மாதங்கள் தங்க முயற்சிகள் நடந்து வருகிறதாம்.