எவ்வளவு காசு போயும் திருந்தலயே!... மீண்டும் சினிமாவுக்கு வரும் சௌந்தர்யா ரஜினிகாந்த்!...

Soundarya rajinikanth: நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா. கிராபிக் டிசைனர், சினிமா தயாரிப்பாளர், இயக்குனர் என பல முகங்களை கொண்டவர் இவர். ஆனால், பெரும்பாலும் அது வெளியே தெரியாது. ரஜினி நடித்த படையப்பா, பாபா, சந்திரமுகி, சிவாஜி, கோச்சடையான் போன்ற படங்களுக்கு டைட்டில் டிசைன் செய்தவர் இவர்தான்.
இதுபோக அன்பே ஆருயிரே, சிவகாசி, மஜா, சண்டக்கோழி, சென்னை 28 போன்ற படங்களிலும் டைட்டில் டிசைன் செய்திருக்கிறார். அஸ்வின் என்பவரோடு இவருக்கு திருமணம் நடந்து ஒரு மகனும் இருந்தநிலையில் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்துவிட்டார். அதன்பின் விஷாகன் வணங்கா முடி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
ஓச்சர் பிக்சர் புரடெக்ஷன் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனம் துவங்கிய சவுந்தர்யா வெங்கட் பிரபு இயக்கிய கோவா படத்தை தயாரித்தார். அந்த படம் இவருக்கு நஷ்டத்தை கொடுத்ததாக சொல்லப்பட்டது. எனவே, ஒரு படத்தோடு படம் தயாரிப்பதை நிறுத்திவிட்டார். அப்பா ரஜினியை வைத்து கோச்சடையான் என்கிற அனிமேஷன் படத்தை இயக்கினார்.

தமிழில் புது முயற்சியாக கோச்சடையான் பார்க்கப்பட்டது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். ஆனால், ரஜினியை அனிமேஷனில் பார்க்க அவரின் ரசிகர்கள் விரும்பவில்லை. எனவே, அப்படம் தோல்வி அடைந்தது. அதோடு, இப்படத்தின் தயாரிப்பாளர் நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். எனவே, லதா ரஜினிகாந்த் சில கோடிகளை கொடுத்து செட்டில் செய்தார். அதன்பின் தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி 2 படத்தை இயக்கினார். இந்த படமும் பெரிய வெற்றியை பெறவில்லை.
எனவே, கடந்த 8 வருடங்களாக சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். இடையில் சில வெப் சீரியஸ்களை எடுக்க திட்டமிட்டார். ஆனால், அதுவும் நடக்கவில்லை. இந்நிலையில், மீண்டும் ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார். திருநெல்வேலியை சேர்ந்த ஒரு வினியோகஸ்தர் இதற்கு பண உதவி செய்யவிருக்கிறாராம். விரைவில் இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.