பல வருஷ உழைப்பு!.. 2D நிறுவனம் கொடுத்த ஷாக்!.. சூர்யா இப்படி செய்யலாமா?!..
Suriya 2D: நேருக்கு நேர் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் சூர்யா. அதன்பின் பிதாமகன், காக்க காக்க போன்ற படங்கள் இவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. துவக்கத்தில் தடுமாறினாலும் ஒரு கட்டத்தில் சினிமாவை புரிந்துகொண்டு நடிக்க துவங்கினார். சிங்கம், சிங்கம் 2 போன்ற சூப்பர் ஹிட் படங்களையும் கொடுத்தார்.
ஒருபக்கம் 2D எண்டர்டெய்மெண்ட் என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் துவங்கினார். இந்நிறுவனம் தயாரித்த முதல் படம் ஜோதிகா நடித்த 36 வயதினிலே. இந்த படம் வெளியான வருடம் 2015. அதன்பின் பசங்க 2, 24, மகளிர் மட்டும், கடைக்குட்டி சிங்கம், உறியடி 2, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள், சூரரைப்போற்று, ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும், உடன்பிறப்பே, ஜெய் பீம், ஓ மை டாக், விருமன், மெய்யழகன், ரெட்ரோ ஆகிய படங்களை இந்நிறுவனம் தயாரித்தது.
பெரும்பாலும் சூர்யா, ஜோதிகா, கார்த்தி ஆகியோர் நடித்த படங்களை இந்நிறுவனம் தயாரித்து வந்தது. கடந்த சில வருடங்களாக இந்நிறுவனம் தயாரித்த மெய்யழகன், ரெட்ரோ உள்ளிட்ட சில படங்கள் இந்நிறுவனத்திற்கு பெரிய லாபத்தை கொடுக்கவில்லை. இதையெல்லாம் விட சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று படத்தை ஹிந்தியில் அக்ஷய்குமாரை வைத்து Sarfira என எடுத்தார்கள். அது படுதோல்வி அடைந்தது. அதோடு, இந்த நிறுவனத்திற்கு கால்ஷீட் கொடுப்பதை கார்த்தியே நிறுத்திவிட்டார்.
சூர்யாவும், கார்த்தியும் இப்போது மற்ற தயாரிப்பாளர்களின் படங்களில் நடிக்க துவங்கிவிட்டனர். அதோடு, 2D நிறுவனத்தை இப்போதைக்கு மூடி விடுவோம் என்கிற முடிவையும் எடுத்திருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக அங்கு 10 வருடங்களாக பணியாற்றி வந்த ஊழியர்களிடம் ‘நீங்கள் வேறு வேலையை பார்த்துக்கொள்ளுங்கள்’ என சொல்லிவிட்டார்களாம். இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அதோடு, அவர்களுக்கு எந்த இழப்பீட்டையும் கொடுக்கவில்லையாம்.
இதில், 6 புரடெக்ஷன் மேனேஜர்களும் அடக்கம் என்கிறார்கள். ஒரு படத்திற்கு இவ்வளவு என ஒப்பந்தம் போட்டு வேலை செய்யாமல் அவர்கள் எல்லோரும் மாத சம்பளத்தில் வேலை செய்திருக்கிறார்கள். எனவே, இதை எந்த சங்கத்திற்கும் எடுத்துக்கொண்டும் போகமுடியாது. எனவே, என்ன செய்வது என தெரியாமல் அவர்கள் புலம்பி வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.