அஜித் - ஆதிக் படத்தை தயாரிப்பதில் இவ்வளவு சிக்கலா?!.. இதுக்கெல்லாம் தாக்கு பிடிச்சாதான் டேக் ஆப்!...
Ajith 64: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்தை யார் தயாரிக்கப்போகிறார் என்கிற பேச்சுதான் இப்போது கோலிவுட்டில் டாக் ஆப் த டவுனாக இருக்கிறது. அஜித்துக்கு 180 கோடி சம்பளம், படத்தின் பட்ஜெட் 280 கோடி என சொன்னதால் பல நிறுவனங்கள் கைவிரித்துவிட்டன.
விடாமுயற்சிக்கு 105 கோடி வாங்கிய அஜித், அந்த படம் ஓடவில்லை என தெரிந்தும் குட் பேட் அக்லிக்கு 165 கோடி சம்பளம் வாங்கினர். குட் பேட் அக்லி படத்தால் அப்படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு 70 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், அஜித் அதைப்பற்றியெல்லாம் யோசிக்காமல் புதிய படத்திற்கு 180 கோடி வரை சம்பளம் கேட்கிறார். ஆனால், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் 100 கோடி மட்டுமே கொடுக்க முடியும் என கைரிவித்துவிட்டது.
அதன்பின் சன் பிக்சர்ஸ், ஏஜிஎஸ் என சில தயாரிப்பு நிறுவனங்களிடம் அஜித் தரப்பு பேசியும் அவர்களில் ஒருவர் கூட முன்வரவில்லை. அதன்பின் ஆதிக் தனது மாமனார் பிரபுவின் சிவாஜி பிலிம்ஸ் நிறுவனத்திடம் பேச திட்டமிடிருப்பதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால், இன்று காலை முதல் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் அஜித்தின் புதிய படத்தை தயாரிக்கவுள்ளதாக செய்திகள் ஓடிக்கொண்டிருக்கிறது. சமூகவலைத்தளங்களில் பலரும் இதை பகிர்ந்து வருகிறார்கள்.
அஜித்தின் புதிய படத்தை தயாரிப்பதில் நிறைய சிக்கல் இருக்கிறது. ஒப்பந்தம் போடும்போதே 55 கோடியை அட்வான்ஸாக கொடுக்க வேண்டும். ஷூட்டிங் முடிந்தவுடன் மீதி பணத்தை கொடுத்துவிட வேண்டும் என அஜித் கண்டிஷன் போடுகிறார். இந்த படத்தில் மோகன்லாலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார். அவருக்கு 20 கோடி சம்பளம் மற்றும் வளைகுடா நாடுகளின் உரிமம் கொடுக்க வேண்டும். பட்ஜெட்டோ கிட்டத்தட்ட 300 கோடி. எனவே, ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இதற்கு தாங்குவாரா என தெரியவில்லை.
ராகுல் ரெட் ஜெயண்ட் மற்றும் அஜித்தை வைத்து பல படங்களை தயாரித்த சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனங்களில் வேலை செய்திருகிறார். அஜித் நடித்த நெர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களின் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டவர் இவர். இப்போது புதிய படங்களை வாங்கி வெளியிட்டு வருகிறார். குட் பேட் அக்லி படத்தை வாங்கி தமிழ்நாட்டில் வெளியிட்டதும் இவர்தான். எனவே, அஜித் இவரை நம்ப வாய்ப்பிருக்கிறது.
அதோடு ரெட் ஜெயண்ட், பிரபல ஃபைனான்சியர் அன்பு செழியன் போன்றவர்களுக்கு நெருக்கமானவர். எனவே, அவர் அஜித்தின் புதிய படத்தை தயாரிக்க நிறைய வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.