1000 கோடி பட்ஜெட்!. டாப் ஹீரோக்களை வைத்து புதிய படங்கள்!.. பரபர அப்டேட்!...

by MURUGAN |   ( Updated:2025-06-27 05:57:14  )
actors
X

சினிமாவில் முன்பெல்லாம் சில லட்சங்களில் மட்டுமே படமெடுத்து வந்தார்கள். 80களில் 25 லட்சத்தை தாண்டினாலே அது பெரிய பட்ஜெட் படமாக கருதப்படும். ஆனால், படங்களின் பட்ஜெட் மெல்ல மெல்ல அதிகரித்து கோடிகளை தாண்டியது. ஆனால், இப்போதெல்லாம் 500 கோடி பட்ஜெட்டில் படமெடுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வந்துவிட்டன. விஜய், அஜித் போன்ற நடிகர்களுக்கு 200 கோடி வரை சம்பளம் கொடுக்கிறார்கள்.

80, 90களில் இருந்தது போல தனிப்பட்ட நபர்கள் பெரிய நடிகர்களை வைத்து படமெடுக்க முடியாத நிலையே கோலிவுட்டில் இப்போது இருக்கிறது. ஏனெனில் பெரிய நடிகர்கள் கேட்கும் 200 கோடி சம்பளத்தை அவர்களால் கொடுக்க முடியாது. அதனால்தான், விஜய், அஜித், ரஜினி போன்றவர்கள் சன் பிக்சர்ஸ், ஏஜிஎஸ், கேவிஎன், மைத்ரி மூவி மேக்கர்ஸ், லைகா போன்ற காப்பரேட் நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களில் நடிக்கிறார்கள்.

இதில் ஒரு நிறுவனம்தான் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல். இதன் நிறுவனம் ஐசரி கணேஷ். இவர் ஒரு கல்வித்தந்தையும் கூட. தமிழகத்தில் பல ஊர்களிலும் இவருக்கு கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. ஆனாலும், அவரின் அப்பா சினிமாவில் இருந்ததால் இவருக்கும் சினிமாவின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது. சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் இவர் நடித்தும் இருக்கிறார்.


எல்.கே.ஜி, கோமாளி, எனை நோக்கி பாயும் தோட்டா, மூக்குத்தி அம்மன், வெந்து தணிந்தது காடு, சிங்கப்பூர் சலூன், சுமோ உள்ளிட்ட பல படங்களை இந்நிறுவனம் தயாரித்திருந்தது. தற்போது சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் மூக்குத்தி அம்மன் 2 படத்தையும் இந்நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில் சுமார் 1000 கோடி பட்ஜெட்டில் புதிய படங்களை எடுக்க இந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

தனுஷ், ஆர்யா, ரஜினி, ரவி மோகன் உள்ளிட்ட பல நடிகர்களையும் வைத்து புதிய படங்களை தயாரிக்க திட்டமிட்டமிட்டுள்ளனர். ஒருபக்கம் அஜித்திடமும் பேசி வருகிறார்கள். எல்லாம் சரியாக அமைந்தால் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் அடுத்து நடிக்கும் படத்தையும் இந்த நிறுவனமே தயாரிக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.

வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் புதிய படங்களின் அறிவிப்பை ஒன்றன் பின் ஒன்றாக வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். அந்த படங்களை வெற்றிமாறன், பிரேம்குமார், கணேஷ் கே பாபு, செல்லா அய்யாவு, கௌதம் மேனன், மாரி செல்வராஜ், ஜீட் ஆண்டனி ஜோசப், விக்னேஷ் ராஜா, அருண் ராஜா காமராஜா போன்ற இயக்குனர்கள் இயக்கவுள்ளனர்.

Next Story