சயின்ஸ் ஃபிக்சன் மட்டுமில்ல.. அதுக்கும் மேல!.. எஸ்.கே.வுக்காக வெங்கட்பிரபு உருவாக்கிய கதை!.
Sivakarthikeyan: சென்னை 28 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வெங்கட்பிரபு. அதன்பின் சரோஜா, கோவா, மங்காத்தா உள்ளிட்ட சில படங்களை இயக்கினார். விஜயை வைத்து கோட் படத்தை இயக்கினார். வெங்கட்பிரபு இயக்கும் படங்களில் பெரும்பாலும் கதையே இருக்காது. காட்சிகளை சுவாரஸ்யமாக வைத்து திரைக்கதை அமைப்பதுதான் இவரின் ஸ்டைல்.
விஜய் வாய்ப்பு கொடுத்து கூட கோட் படத்தில் சொதப்பி வைத்தார். அதனால் போட்ட பட்ஜெட்டை தாண்டி வெறும 50 கோடிதான் வசூலானது. எனவேதான் எற்கனவே ஒப்புக்கொண்டிருந்தாலும் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் யோசித்தார். பல மாதங்களாக சிவகார்த்திகேயனை ஃபாலோ செய்து தற்போது ஒரு வழியாக சம்மதம் வாங்கியிருக்கிறார் வெங்கட்பிரபு.
அமரன் ஹிட்டுக்கு பின் சிவகார்த்திகேயன் வேறலெவலுக்கு போய்விட்டார். பெரிய இயக்குனர்கள், பெரிய படங்கள் என்பதே அவரின் டார்கெட்டாக இருக்கிறது. அதனால்தான் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி, சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி போன்ற படங்களில் நடித்து வருகிறார். தற்போது மதராஸி படம் முடிந்துவிட்டது. பராசத்தி ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.
ஒருபக்கம், சிவகார்த்திகேயனின் அடுத்து நடிக்கும் படத்தை இயக்குவது டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி, வெங்கட் பிரபு, குட் நைட் பட இயக்குனர் வினாயக் சந்திரசேகரன் என மூன்று பேரின் பெயரும் அடிபட்டது. ஆனால், சிவகார்த்தியனுக்கும், சிபிக்கும் இடையே முட்டிக்கொண்டதால் அவர் நானியை வைத்து படம் இயக்க முயற்சி செய்தார். வினாயக் சந்திரசேகர் சொல்லும் கதையில் மோகன்லால் நடிக்க வேண்டும் என சிவகார்த்திகேயன் ஆசைப்படுகிறார். ஆனால், மார்ச் மாதம் வரை அவரின் கால்ஷீட் இல்லை.
அதனால்தான் வெங்கட்பிரபு பெயரின் அடிபட்டது. அதன்பின் சிபி சக்ரவர்த்தி பெயர் அடிபட்டது. சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கபோவது யார் என்பது விரைவில் தெரிந்துவிடும். இந்நிலையில், சிவகார்த்திகேயனுக்கு வெங்கட்பிரபு சொல்லியிருக்கும் கதை சயின்ஸ் பிக்சன் மட்டுமல்ல. மாநாடு படத்தில் வருவது போல டைம் லூப் கான்செப்ட்டையும் இதில் வெங்கட்பிரபு வைத்திருக்கிறாராம். எனவே, கண்டிப்பாக இப்படம் ரசிகர்களை கவரும் என கணிக்கப்படுகிறது.