விஜயகாந்த் நடித்து பீதியை கிளப்பிய திரில்லர் படங்கள்!.. மறக்க முடியாத ஊமை விழிகள்!...

by sankaran v |   ( Updated:2024-03-29 07:31:40  )
விஜயகாந்த் நடித்து பீதியை கிளப்பிய திரில்லர் படங்கள்!.. மறக்க முடியாத ஊமை விழிகள்!...
X

Vijayakanth

கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் மிரட்டலாக 2 படங்கள் வந்துள்ளன. யாருமே நடிக்கத் தயங்கும் வேடத்தில் அப்பவே கெத்தாக நடித்தார் கேப்டன். இளவயதில் முதுமை தோற்றத்தில் நடிக்க யார் தான் முன்வருவார்? மார்க்கெட் காலியாகி விடுமே என்று பயப்படுவார்கள். அந்த ஒரு நிலைமை வந்த படம் தான் இது. ஆனால் கதையை மட்டுமே நம்பி துணிச்சலாக நடித்து அசத்தினார் கேப்டன். இப்போது அந்த இரண்டு படங்கள் பற்றிப் பார்ப்போம்.

நூறாவது நாள்

Nooravathu naal

Nooravathu naal

1984ல் வெளியான படம் நூறாவது நாள். மணிவண்ணன் இயக்கத்தில் வெளியானது. விஜயகாந்த், நளினி, மோகன், சத்யராஜ் நடித்தது. 12 நாள்களில் எடுக்கப்பட்ட பிரம்மாண்டமான படம். பயங்கரமான திரில்லர் படம். மோகன் கொலை பண்ணி கொலை பண்ணி எல்லோரையும் மிரள வைத்த படம். இந்தப் படத்தோட காட்சி அமைப்புகள் ரொம்ப பயங்கரமாக எடுக்கப்பட்டு இருக்கும். சத்யராஜூம் மொட்டைத்தலையோடு வந்து அசத்தியிருப்பார். மொட்டையோடு வந்து ரத்தத்தோடு நிற்பார். ரொம்பவே பயங்கரமா இருக்கும்.

ஊமை விழிகள்

Oomai vizhigal

Oomai vizhigal

1986ல் வெளியானது. திரைப்படக் கல்லூரி மாணவர்கள் இயக்கிய படம். அரவிந்த் இயக்கினார். ஆபாவாணன் டீம். இந்தப் படத்துல யாருமே முதுமையான வேடத்துல நடிக்க வரல. கேப்டன் விஜயகாந்த் அந்த வேடத்துல நடித்தார். அருண்பாண்டியன், கார்த்திக், ஜெயச்சந்திரன். சரிதா, மலேசியாவாசுதேவன், ரவிச்சந்திரன், சந்திரசேகர், விசு, சச்சு, டிஸ்கோ சாந்தி, தேங்காய் சீனிவாசன், சசிகலா என பலரும் நடித்துள்ளனர். இது ஒரு திரில்லாங்கான படம்.

காட்சி அமைப்புகள் எல்லாமே வித்தியாசமாக இருக்கும். 1 மணி நேரம் கழித்துத் தான் விஜயகாந்தே வருவாரு. தீனதயாளன் என்ற கேரக்டரில் கலக்குவாரு. ஒவ்வொரு கொலையாளியா கண்டுபிடிப்பாரு. மெயின் வில்லனா ரவிச்சந்திரன் நடிச்சிருப்பார். கிளைமாக்ஸ் மிரட்டலா இருக்கும். இது 200 நாள் ஓடிய மகத்தான வெற்றிப்படம். இயக்குனர்களுக்கு நல்ல வரவேற்பைக் கொடுத்த படம் இதுதான்.

Next Story