அர்ச்சனா கப் அடிக்க சொல்லி கொடுத்த பிபி8 போட்டியாளர்… அவருக்கு கோளாறா இருக்கே!...

by Akhilan |
அர்ச்சனா கப் அடிக்க சொல்லி கொடுத்த பிபி8 போட்டியாளர்… அவருக்கு கோளாறா இருக்கே!...
X

Archana: பிக் பாஸ் சீசன் 7ல் வெற்றியாளரான அர்ச்சனா ரவிசந்திரன் தன்னுடைய நண்பர் அருண் குறித்து சக போட்டியாளரான தயாரிப்பாளர் ரவீந்திரன் புலம்பி இருப்பது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சின்னத்திரை பிரபலங்களுக்கு தொடர்ச்சியாக பிக் பாஸ் தொடங்கியதிலிருந்து ஒவ்வொரு சீசனுக்கும் வாய்ப்பு வருவது வழக்கம்தான். அதில் ஒரு சீசனுக்கு சில பிரபலம் என ஏழு சீசன்கள் கடந்துவிட்டது. ஆனால் விதிவிலக்காக எட்டாவது சீசன் நிறைய சின்னத்திரை பிரபலங்கள் தான் உள்ளே சென்று இருக்கின்றனர்.

இந்த சீசன் உத்தேச போட்டியாளர்கள் வெளியான முதல் கணிப்பிலிருந்து பட்டியலில் இருந்தவர் அருண் பிரசாத். இவருக்கு இந்த வாய்ப்பை அவருடைய காதலி எனக்கு கிசுகிசுக்கப்படும் அர்ச்சனா ரவிசந்திரன் பெற்றுக் கொடுத்ததாக தகவல்கள் கூறப்படுகிறது. பெரிய எதிர்பார்ப்புடன் உள்ளே சென்ற அருண் பிரசாத் அதை தவறவிட்டிருக்கிறார்.

கடந்த இரண்டு சீசன்களாகவே ஆண் போட்டியாளர்கள் தங்களுடைய ஆதிக்கத்தை பிக் பாஸ் தமிழில் காட்டத் தவறி வருகின்றனர். இதனால் பெண் போட்டியாளர்களின் ஆதிக்கம் அதிகமாகி இருக்கிறது. இந்த சீசனும் கடந்த இரண்டு எலிமினேஷனாக ரவீந்திரன் மற்றும் அர்னவ் வெளியேறி இருக்கின்றனர்.

இதில் தயாரிப்பாளர் ரவீந்திரன் தன்னுடைய பிக் பாஸ் அனுபவம் குறித்து பேட்டி கொடுக்க தொடங்கி இருக்கிறார். அதில் பேசிய அவர், நான் வெளியில் வந்தவுடன் எனக்கு அர்ச்சனா கால் செய்து பேசினார். நான் நன்றாக விளையாடியதை கூறி பாராட்டையும் தெரிவித்தார்.

அவரும், அருணும் நண்பர்கள் என்பது எனக்கு தெரியாது. அதை கூறி அர்ச்சனா அருண் இப்படி விளையாடுவது கஷ்டமாக இருக்கிறது. கடந்த சீசன் வாய்ப்பு அவருக்கு தான் வந்தது. அவர்தான் என்னை அனுப்பி எப்படி விளையாட வேண்டும் என்பதையும் சொல்லி அனுப்பினார் எனவும் தெரிவித்திருக்கிறார்.

ரவீந்திரன் வெளியிட்டிருக்கும் இந்த தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். கடந்த சீசனில் அர்ச்சனா விளையாடியது மிகத் தெளிவான ஆட்டம். அதனால் தான் அவரால் டைட்டிலை வெல்ல முடிந்தது. அப்படி ஒருவருக்கு பயிற்சி கொடுத்த அருண் ஏன் இந்த சீசனில் சொதப்புகிறார் எனவும் தற்போது கேள்வி எழுந்திருக்கிறது.

Next Story