இஷ்டத்துக்கு பேசுவீங்களா?… விஜய் சேதுபதியை அவமதித்த டைட்டில் வின்னர்…

by Akhilan |   ( Updated:2024-10-23 12:30:37  )
இஷ்டத்துக்கு பேசுவீங்களா?… விஜய் சேதுபதியை அவமதித்த டைட்டில் வின்னர்…
X

Vijay sethupathi: பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவது பலருக்கு பிடித்தமானதாக இருந்தாலும் தற்போது சிலரிடமிருந்து கண்டனங்களும் வலுத்துக் கொண்டிருக்கிறது. இது குறித்து கடந்த சீசன் டைட்டில் வின்னர் பதிவால் தற்போது சர்ச்சை எழுந்திருக்கிறது.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை முதல் முறையாக கமல் இல்லாமல் தொடங்கப்பட இருப்பதாக அறிவிப்புகள் வெளியானது. அவருடைய இடத்தை நடிகர் விஜய் சேதுபதி பிடித்தார். ஆனால் கமல்ஹாசன் கொடுத்த தக் விஷயங்களை கையாள முடியுமா என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் முதல் நாள் அறிமுக விழாவில் கமர்சியல் ரசிகர்களுக்கு விஜய் சேதுபதி தான் வேண்டும் என நம்ப வைத்தார். தேவையான இடங்களில் சரியாக கொட்டு வைத்து அப்ளாஸ் அள்ளினார். இது ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

ரசிகர்கள் நினைப்பதை விஜய் சேதுபதி பேசுவதாக தான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இது பல இடங்களில் பாராட்டுகளை பெற்றாலும் சில இடங்களில் பிரச்சனையாக முடிந்திருக்கிறது. கடந்த வாரம் எலிமினேட்டான ஆர்னவ் வெளியில் வந்து பாய்ஸ் டீமை ஏகத்துக்கும் விளாசினார்.

ஆனால் விஜய் சேதுபதி உங்கள் வன்மத்தை கொட்டும் இடம் இது இல்லை எனக் கூறி அவர் பேச்சை அப்படியே நிறுத்தினார். இது கண்டனத்திற்கு உண்டானது. இந்நிலையில் அதே எபிசோடில் நடிகர் அருண் பிரசாத் பாய்ஸ் டீமில் சொம்பு தூக்கி யாரும் இல்லை என அவர் கூற அப்போ நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்பார் விஜேஎஸ்.

இதுபோல முந்தைய வார எபிசோடு ஒன்றில் யாரையும் குறை கூற முடியாது என அருண் பேச அப்போ உங்களை திருத்த முடியாது என விஜய் சேதுபதி கவுண்டர் கொடுத்திருப்பார். இது குறித்த வீடியோவை பிக் பாஸ் சீசன் 7ன் டைட்டில் வின்னரான அர்ச்சனா கவலை அளிக்கும் எமோஜிக்களுடன் பதிவிட்டு இருக்கிறார்.

இது குறித்து ரசிகர்கள் தற்போது கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காதலனுக்காக பெரிய நிகழ்ச்சியின் தொகுப்பாளரை அந்த நிகழ்ச்சி டைட்டில் வின்னர் அவமானப்படுத்துவது சரியாக இருக்குமா? இதுவே கமல்ஹாசன் இதைச் செய்திருந்தால் இப்படி பேசி இருப்பீர்களா எனவும் கேள்வி எழுந்திருக்கிறது.

Next Story