பிக்பாஸ் தமிழ் சீசன் 8 ஃபைனல் லிஸ்ட் இதுவா?!.. அட நம்ம கவர்ச்சி கன்னியும் இருக்காரே!...

பிக்பாஸ் தமிழ் சீசன் இதுவரை 7 சீசன்களை முடிந்துவிட்டது. ஏழு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசனே நடத்தினார். ஆனால், கடந்த அதாவது 7வது சீசனில் அவர் எடுத்த சில முடிவு விமர்சனத்துக்குள்ளானது. ஒருபக்கம், தொடர்ந்து சினிமாவில் நடிப்பது, ஏ.ஐ. கற்றுக்கொள்வதற்காக அமெரிக்கா செல்வது போன்ற சில காரணங்களால் சீசன் 8 நிகழ்ச்சியை தான் நடத்தவில்லை என கமல் அறிவித்தார்.

ஒவ்வொரு சீசனுக்கும் அவருக்கு பல கோடிகள் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. 60 கோடி முதல் 100 கோடி அவர் சம்பளம் பெற்றதாகவும் சொல்லப்பட்டது. இத்தனைக்கும் வாரத்தில் ஒரு நாள் மட்டும் அவருக்கு படப்பிடிப்பு. சனிக்கிழமை காலை சென்றால் மாலை வரை படப்பிடிப்பு நடக்கும்.

அதில், சனி மற்றும் ஞாயிறுக்கான பகுதிகளை எடுத்துவிடுவார்கள். கமல் இந்த நிகழ்ச்சியை சரியாக நடத்தியதால் விஜய் டிவி அவருக்கு மாற்றாக யாரையும் அணுகவில்லை. இந்த முறை கமல் முடியாது என சொல்லிவிட்டதால் விஜய் சேதுபதி பக்கம் போனார்கள். அவரும் சம்மதித்துவிட்டதால் புரமோஷன் வீடியோக்களும் வெளியானது.

இந்த முறை எத்தனை போட்டியாளர்கள் உள்ளே போகிறார்கள்? யார் யார் பங்கேற்க போகிறார்கள் என்கிற் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. பலரின் பெயர்களும் அடிபடுகிறது. பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் துவங்கவுள்ளது. இந்நிலையில், இதுதான் போட்டியாளர்கள் ஃபைனல் லிஸ்ட் என ஒரு தகவல் இணையத்தை சுற்றி வருகிறது.

அன்ஷிதா, பப்லு பிரித்திவிராஜ், குரைஷி, சம்யுக்தா விஸ்வநாதன், திவ்யா துரைசாமி, வீஜே விஷால், ரோஷினி ஹரிப்பிரியன், நடிகர் ரஞ்சித், நடிகை பூனம் பாஜ்வா, அமலா ஷாஜி, ஷாலினி ஜோயா, அக்‌ஷிதா அசோக், ரித்திகா என 13 பேர் பிக்பாஸ் வீட்டிக்கு போக போகிறார்கள் என சொல்லப்படுகிறது.

வழக்கம் போல் இதில் சிலர் மட்டுமே ரசிகர்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவர்கள். பூனம் பாஜ்வா கவர்ச்சி புகைப்படங்களால் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருபவர். இவர் உள்ளே போனால் பிக்பாஸ் நிகழ்ச்சி களை கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், பிக்பாஸ் துவங்கும் நாள் அன்றே இந்த லிஸ்ட்டில் இருப்பவர் எத்தனை பேர் உள்ளே போகிறார்கள் என்பது தெரியவரும்.

Admin
Admin  
Related Articles
Next Story
Share it