பிக்பாஸ் சீசன் 8ல் வைல்ட் கார்டில் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரபலம்... யாருன்னு தெரியுமா..?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக நடிகர் சந்தோஷ் பிரதாப் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

By :  ramya
Update: 2024-10-29 05:00 GMT

vijaysethupathi

விஜய் டிவியில் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது வரை வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். தற்போது 8-வது சீசன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. கடந்த ஏழு சீசன்கள் வரை பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் கமலஹாசன் அவர்கள். தற்போது 8-வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகின்றார். கடந்த 2 வாரங்களாக விஜய் சேதுபதி நிகழ்ச்சி நடத்திய விதம் பலரையும் கவர்ந்துள்ளது என்று தான் கூற வேண்டும்.

இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளார்கள். கடந்த அக்டோபர் 6-ம் தேதி தொடங்கிய இந்து சீசனில் இதுவரை ரவீந்தர் மற்றும் ஆர்னவ் ஆகியோர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். மேலும் மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்து அசத்தியிருந்த சாச்சனா பிக் பாஸ் போட்டியில் பங்கேற்ற 24 மணி நேரத்திலேயே எலிமினேட் செய்யப்பட்டார்.

அதைத்தொடர்ந்து மீண்டும் வைல்ட் கார்டு என்ரியாக வீட்டிற்குள் நுழைந்து விறுவிறுப்பாக விளையாடி வருகின்றார். அந்த வகையில் தற்போது 16 போட்டியாளர்கள் தொடர்ந்து விளையாடி வருகிறார்கள். தொடர்ந்து தினமும் புதுப்புது டாஸ்கள் கொடுக்கப்பட்டு ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இருப்பினும் போட்டியாளர்கள் மிகவும் சுதாரிப்புடன் விளையாடி வருவதாகவும், இதனால் நிகழ்ச்சி சற்று போரடிக்கும் வகையில் இருப்பதாக பலரும் கூறி வருகிறார்கள்.

ஒவ்வொரு பிக்பாஸ் சீசனிலும் போட்டியின் சுவாரசியத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக வைல்ட் கார்டு என்ட்ரி என்று புதிய போட்டியாளர்களை உள்ளே அனுப்புவது வழக்கம்தான். இந்த முறை அப்படி சில போட்டியாளர்கள் உள்ளே போக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வருகின்றது. கடந்த சீசனில் வைல்ட் கார்டு என்ரியாக உள்ளே சென்ற அர்ச்சனா யாரும் எதிர்பார்க்காத வகையில் சிறப்பாக விளையாடி டைட்டிலை தட்டி சென்றார்.

அந்த வகையில் இந்த முறை அப்படி ஸ்ட்ராங்கான போட்டியாளராக யார் உள்ளே இறங்க போகிறார்கள் என்று பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள். ஏற்கனவே இரண்டு, மூன்று பிரபலங்களின் பெயர் அடிபட்டு வருகின்றது. அதில் முதலாவதாக இருப்பது ஜாலியன் சோயா. இவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று மிகவும் பிரபலமானார்.

இவர் வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ள நுழைய வாய்ப்பு இருப்பதாக பலரும் தெரிவித்து வருகிறார்கள். அதற்கு அடுத்ததாக டிஎஸ்கே மற்றும் எலிமினேட்டான ஆர்னவின் மனைவி திவ்யா ஆகியோரின் பெயர்கள் அடிபட்டு வந்தது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சந்தோஷ் பிரதாப் வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



 


Tags:    

Similar News