ராபர்ட் மாஸ்டரை வனிதா விஜயகுமார் விடமாட்டாரு போல!.. சும்மா கூடவே சுத்துறாரே!.. புது வீடியோ!..

பிக் பாஸ் சீசன் 8ன் புரோமஷனுக்காக வனிதா விஜயகுமார் மற்றும் ராபர்ட் மாஸ்டர் இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள புதிய வீடியோ ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.

By :  saranya
Update: 2024-10-03 14:31 GMT

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை புரமோட் செய்யும் விதமாக வனிதா விஜயகுமார் மற்றும் ராபர்ட் மாஸ்டர் இருவரும் இணைந்து வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளனர்.

வனிதா விஜயகுமார் ராபர்ட் மாஸ்டர் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தனர். வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி அதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிஸ்டர் அண்ட் மிஸ்டிரஸ் படத்திற்கான புரமோஷனை தான் வனிதா மற்றும் ராபர்ட் மாஸ்டர் இருவரும் இப்படி இறங்கி செய்துள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனாலும், வனிதா விஜயகுமார் தொடர்ந்து ராபர்ட் மாஸ்டர் உடன் தான் தற்போது நெருக்கமாக பழகி வருகிறார் என்பதற்கு மற்றொரு ஆதாரமாக இந்தப் புதிய வீடியோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்த முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் இதேபோன்ற புரோமோஷன்களை கடந்த சில நாட்களாக செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

நடிகை சனம் ஷெட்டி, வனிதா விஜயகுமார், ராபர்ட் மாஸ்டர் மற்றும் பல முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்னதாக 4:30 மணிக்கு வெளியாகும் என்கிற அறிவிப்பையும் சனம் ஷெட்டி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் 8வது சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏகப்பட்ட பிரபலமான போட்டியாளர்கள் பங்கேற்கப் போவது உறுதியாகியுள்ளது. விடிவி கணேஷ், ஐஸ்வர்யா, பூனம் பஜ்வா, ஆலியா மானசா, பப்லு பிரித்திவிராஜ், பால் டப்பா, அருண், மகாராஜா படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்த சச்சனா நமிதாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்கப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Tags:    

Similar News