நண்பனுக்காக காதலியை அனுப்பி வைத்த காதல் மன்னன்!.. ஊஞ்சலாடிய சந்திரபாபுவின் இளமை!..
சந்திரபாபுவின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிக் கேள்விப்பட்டால் சொந்த வாழ்க்கை சோகம் நிறைந்ததுதான் என்றாலும் மனுஷன் என்னமா வாழ்ந்துருக்கான்னு சொல்வாங்க. இதுபற்றி அவரின் சகோதரர் ஜவஹர் என்ன சொல்கிறார்னு பார்ப்போம். குடி வந்து முதல்ல ஒரு சோஷியல் கேதரிங் மாதிரி எடுத்துக்கிட்டாரு. படம் நிறைய வரவர புகழும் நிறைய வர சொசைட்டி நிறைய வர ஆரம்பிச்சது. நிறைய கிளப்ல மெம்பரா சேருறாரு. பெரிய சொசைட்டி. பார்ட்டி, டிரிங்க் தான். இந்தப் பழக்கம் தொடர்ந்தது. அதுலயே அடிமையா ஆகிட்டாரு. ஆனா […]
சந்திரபாபுவின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிக் கேள்விப்பட்டால் சொந்த வாழ்க்கை சோகம் நிறைந்ததுதான் என்றாலும் மனுஷன் என்னமா வாழ்ந்துருக்கான்னு சொல்வாங்க. இதுபற்றி அவரின் சகோதரர் ஜவஹர் என்ன சொல்கிறார்னு பார்ப்போம்.
குடி வந்து முதல்ல ஒரு சோஷியல் கேதரிங் மாதிரி எடுத்துக்கிட்டாரு. படம் நிறைய வரவர புகழும் நிறைய வர சொசைட்டி நிறைய வர ஆரம்பிச்சது. நிறைய கிளப்ல மெம்பரா சேருறாரு. பெரிய சொசைட்டி. பார்ட்டி, டிரிங்க் தான். இந்தப் பழக்கம் தொடர்ந்தது. அதுலயே அடிமையா ஆகிட்டாரு.
ஆனா சூட்டிங் டைம்ல குடிக்க மாட்டாரு. வீட்ல குடிப்பாரு. மத்தியானத்துல குடிக்க மாட்டாரு. ராத்திரி தான் குடிப்பாரு. இந்த காலகட்டத்துல தான் சாவித்திரி வந்தாங்க. அந்த டீடெய்ல நான் சொல்ல விரும்பல. அதனால இன்னும் குடி ஜாஸ்தியா ஆயிட்டு. ரெண்டு பேரும் சேர்ந்தா என்ன ஆகும்? கப்பல் மூழ்கத் தானே செய்யும்? அதான் அவரோட வீழ்ச்சிக்குக் காரணம்.
சந்திரபாபுவும் ஜெமினிகணேசனும் இணைபிரியாத நண்பர்கள். ஜெமினி ஸ்டூடியோவுல புரொடக்ஷன் மேனேஜரா ஜெமினிகணேசன் இருக்கும்போதே சந்திரபாபுவுக்குப் பழக்கம். அப்போ ரெண்டு பேரும் பைக்ல ஜாலியா சுத்துவாங்க.
அப்ப ஜெமினிகணேசனுக்கு ஏறுமுகம் ஆச்சு. சந்திரபாபுவுக்கு ஓரளவு பிக் அப் ஆகிட்டு இருக்கு. மனம் போல் மாங்கல்யம்னு ஒரு படம். அதுல ஜெமினிகணேசனுக்கு காமெடி ரோல். ஸ்கிரிப்ட எடுத்துக்கிட்டு நேரா அண்ணன் வீட்டுக்கு வந்தாரு. காமெடி ரோல்டா. நான் எப்படிடா ஆக்ட் பண்ணனும்னு கேட்டார். இதை நீ ஆக்ட் பண்ணிக் காட்டு. நான் அதை அப்படியே போய் நடிச்சிடறேன்னுட்டாரு. முழுகதையையும் கொண்டு வந்து அண்ணன் ராவும் பகலுமா ஆக்ட் பண்ணிக் காட்டினார். அதை அப்படியே மனசுல வாங்கி ஜெமினி நடிச்சாரு.
மணமகன், பந்தபாசம், ஆடிப்பெருக்குன்னு பல படங்களில் ஜெமினிகணேசன் சந்திரபாபு நடிக்கக் காரணமாக இருந்தார். சாவித்திரியும், ஜெமினியும் ப்ரண்ட்லியா இருந்தாங்க. சந்திரபாபு அதை அட்வான்ஸா எடுத்துக்கிட்டாரு. இது சகஜம். இவருக்கு வாழ்க்கைல பெயிலியர். வேற யாரையும் லவ் பண்ணல. எந்த நடிகையோடும் கிசுகிசு கிடையாது.
நெருக்கமானதனால சாவித்திரிக்கும் இவருக்கும் கனெக்ஷன் அதிகமாச்சு. ஜெமினிகணேசன் நண்பன் தானேன்னு விட்டுக் கொடுத்தாரு. நமக்கு ஒண்ணும் துரோகம் செஞ்சிட மாட்டான்னு நம்பினாரு. அப்போ சந்திரபாபு போன் பண்ணி 9 மணிக்கு படம் பார்க்க போலாமான்னு கேட்பாரு. அதுக்கு எனக்கு சூட்டிங் இருக்குடான்னு ஜெமினி சொல்வார். அப்படின்னா சாவித்ரிய அனுப்பறீயான்னு கேட்பாரு. சரின்னு அனுப்பி வைப்பார் ஜெமினி.
சினிமாவுக்குப் போக மாட்டாங்க. ஐஸ்கிரீம், சாக்லேட்னு சாப்பிடுவாங்க. கதவை தாழ்ப்பாள் போடாதடா... வந்துடுவேன்னு சொல்லிட்டுப் போவாரு. சினிமாவுக்குப் போகலயான்னு ‘கேட்டா நீ பேசாம வாயை மூடிக்கிட்டுப் போடா’ன்னு சொல்லிடுவாரு. 11 மணிக்கு வந்துடுவாங்க. என்னம்மோ ஏதோ எனக்குத் தெரியாது. 2 மணிக்கு போன் பண்ணுவாரு.
ஜெமினிகணேசன் வந்து கூட்டிட்டுப் போயிடுவாரு. இப்படித்தான் லைஃப்ல நடந்தது. எங்க அண்ணன் மேல தப்பு கிடையாது. சாவித்திரி மேல தப்பு கிடையாது. ஜெமினிகணேசன் மேல தப்பு கிடையாது. இளமை ஊஞ்சலாடியது’ என கூறினார்.