மகன் ஜோடியை தன்வசம் இழுத்து பிடித்த தந்தை.! அது என்ன பொண்ணா? போண்டா டீயா.?! இதோ அந்த வீடியோ..

by Manikandan |
மகன் ஜோடியை தன்வசம் இழுத்து பிடித்த தந்தை.! அது என்ன பொண்ணா? போண்டா டீயா.?! இதோ அந்த வீடியோ..
X

தமிழில் ரஜினி எப்படி ஒரு சூப்பர் ஸ்டாரோ, அதே போல தெலுங்கு சினிமாவில் உச்சத்தில் இருந்த நடிகர் என்றால் அது மெகா ஸ்டார் சிரஞ்சீவி தான். இவர் நடிப்பில் உச்சத்தில் இருக்கும் போதே அரசியலில் நுழைந்து, பின்னர், அதில் இருந்து விலகி, மீண்டும் சினிமாவுக்கு வந்தார்.

வந்த பிறகும் அவருக்கான வரவேற்பு குறையவில்லை. தற்போது இவர் நடிப்பில் ஆச்சார்யா எனும் திரைப்படம் உருவாகி விட்டது. இந்த திரைப்படம் இந்த வாரம் வெளியாக உள்ளது. இந்த படத்தை கொரட்டலா சிவா இயக்கியுள்ளார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் RRR ராம் சரண் நடித்துள்ளார்.

முதன் முறையாக ராம் சரண் மற்றும் அவரது தந்தை சிரஞ்சீவி இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி அண்மையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

இதையும் படியுங்களேன் - கொஞ்சம் கருணை காட்டுங்கள்..! கமலிடம் அனுமதி கேட்டு நிற்கும் சந்தானம்.! இதான் விஷயமா.?!

அதில் ராம் சரண், சிரஞ்சீவி, பூஜா ஹெக்டே மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது , ராம் சரண், சிரஞ்சீவி, பூஜா ஹெக்டே மூவரும் மேடையில் நிற்கும் போது, பூஜா அங்கிருக்கிருந்து நகர பார்ப்பார். உடனே பூஜாவை கயிறு கட்டி இழுப்பது போல சைகை செய்து அவரை தன்வசம் வரவைப்பார் சிராஜீவி. பின்னர் ராம் சரணை ஒதுக்கிவிட்டு சிரஞ்சீவி மற்றும் பூஜா ஒன்றாக இணைந்து போஸ் கொடுத்தனர்.

தன மகன் முன்னே அவரின் ஜோடியான பூஜாவை தன்வசம் இழுத்து போஸ் கொடுத்த இந்த கலகலப்பான வைரல் வீடியோ மிகவும் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதனை பூஜா ஹெக்டேவே பகிர்ந்துள்ளார்.

Next Story