என்ன ரஜினிக்கு அந்த சூப்பர்ஹிட் படத்தில் டப்பிங் பேசியது பாடகர் மனோவா?

ரஜினி ரசிகர்கள் மனதில் ஸ்பெஷலான இடம்பிடித்திருக்கும் படம் படையப்பா. பஞ்ச், எமோஷன், ஹீரோயிஸன் என பக்கா கமர்ஷியல் படமாக 1999-ல் வெளியாகி, அந்த டைமில் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய கலெக்‌ஷனை ஈட்டிய படம் என்ற புகழ்பெற்றது படையப்பா. கே.எஸ்.ரவிக்குமார் - ரஜினி - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி முத்துவுக்குப் பிறகு சொல்லியடித்த படம். இதில், ரஜினி தவிர்த்து சிவாஜி, லட்சுமி, சௌந்தர்யா, நாசர், மணிவண்ணன் உள்ளிட்டோர் முக்கியமான ரோல்களில் நடித்திருந்தனர். குறிப்பாக, வில்லியாக நீலாம்பரி ரோலில் ரம்யாகிருஷ்ணன் மிரட்டியிருப்பார். […]

Update: 2024-07-17 10:03 GMT

ரஜினி ரசிகர்கள் மனதில் ஸ்பெஷலான இடம்பிடித்திருக்கும் படம் படையப்பா. பஞ்ச், எமோஷன், ஹீரோயிஸன் என பக்கா கமர்ஷியல் படமாக 1999-ல் வெளியாகி, அந்த டைமில் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய கலெக்‌ஷனை ஈட்டிய படம் என்ற புகழ்பெற்றது படையப்பா.

கே.எஸ்.ரவிக்குமார் - ரஜினி - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி முத்துவுக்குப் பிறகு சொல்லியடித்த படம். இதில், ரஜினி தவிர்த்து சிவாஜி, லட்சுமி, சௌந்தர்யா, நாசர், மணிவண்ணன் உள்ளிட்டோர் முக்கியமான ரோல்களில் நடித்திருந்தனர். குறிப்பாக, வில்லியாக நீலாம்பரி ரோலில் ரம்யாகிருஷ்ணன் மிரட்டியிருப்பார்.

உலகம் முழுக்க 210 பிரிண்டுகள் போடப்பட்டு, 7 லட்சம் ஆடியோ கேசட்டுகளுடன் வெளியான முதல் தமிழ் படம் என்கிற பெருமையும் படையப்பாவுக்கு உண்டு. சௌந்தர்யா நடித்திருந்த வசுந்த்ரா கேரக்டரில் நடிக்க சிம்ரன், மீனா உள்ளிட்டோரின் பெயர்கள் ஆரம்பத்தில் பரிசீலிக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல், ரஜினியின் சகோதரியாக சித்தாரா நடித்திருந்த கேரக்டரில் நடிக்க ஷாலினியையும் யோசித்திருக்கிறார்கள்.

ரஜினிக்கு சொந்தமாக ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் கிளைமேக்ஸ் காட்சியோடு ஷூட்டிங்கைத் தொடங்கியிருக்கிறார்கள். அதேபோல், நீலாம்பரியின் அறிமுகக் காட்சியில் அவர் வந்திறங்கும் டொயோட்டா சியாரா கார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாருக்குச் சொந்தமானது. படம் 19 ரீல்கள் கொண்டதாக இருந்தபோது, இரண்டு இடைவேளைகளை விடலாம் என்று கே.எஸ்.ரவிக்குமாருக்கு ரஜினி ஆலோசனை சொன்னதும் நடந்தது. ஆனால், கே.எஸ்.ரவிக்குமாருக்கு அதில் விருப்பமில்லை.

ரம்யா கிருஷ்ணன் கேரக்டர் பரவலான பாராட்டுகளைப் பெற்ற நிலையில், சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருதும் அவருக்குக் கிடைத்தது. அதேபோல், தமிழ்நாடு அரசின் விருதுப் பிரிவில் 5 விருதுகளையும் படம் வென்றது. இந்தப் படம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு அங்கும் பெரிய வெற்றியைக் குவித்தது.

தெலுங்கில் ரஜினிக்கு வாய்ஸ் கொடுத்தது பிரபல பிண்ணனிப் பாடகரான மனோ. படத்தில் வரும் பிரபலமான 'அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும்...’ டயலாக்கை தெலுங்கில் பாடகர் மனோ டப் செய்துகொண்டிருந்தபோது அங்கே ரஜினி வந்திருக்கிறார். மனோவுக்கு ரஜினியைப் பார்த்ததும் பதட்டமும் அதிகமாகவே, பேசவே சிரமப்பட்டிருக்கிறார்.

'சார், உங்களைப் பார்த்தா எனக்குக் கொஞ்சம் பதட்டமா இருக்கு’ என எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் ரஜினி அங்கிருந்து கிளம்பவில்லையாம். 'நல்லா வருது மனோ.. பண்ணுங்க.. பண்ணுங்க’ என ஊக்கப்படுத்தியிருக்கிறார். அவரின் டயலாக் டெலிவரியை ரசித்த ரஜினி அங்கேயே தொடர்ந்து பாராட்டவும், ஒரு வழியாக சமாளித்து அந்த டயலாக்கை பேசி அசத்தினாராம் மனோ.என்ன ரஜினிக்கு அந்த சூப்பர் ஹிட் படத்தில் டப்பிங் பேசியது பாடகர் மனோவா? இது நம்ம லிஸ்ட்டிலயே இல்லயே!..

Tags:    

Similar News