பிரசாந்துக்காக உருவான காதலன் படத்துல பிரபுதேவா வந்தது இப்படி தானா?

ஒருத்தருக்கு அதிர்ஷ்டம் அடிக்குதுன்னா கூரையைப் பிய்ச்சிக்கிட்டாவது வரும்னு சொல்வாங்க... அது உண்மை தான்..!

By :  sankaran
Update: 2024-09-29 12:30 GMT

1994ல் ஷங்கர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பிரம்மாண்டமாக உருவான படம் காதலன். பாடல்கள் எல்லாம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. யாருமே எதிர்பார்க்காத வகையில் பிரபுதேவா ஹீரோ ஆனார். ஆனால் இது பிரசாந்துக்காக எழுதுன கதை. எப்படி உள்ளே வந்தாருன்னு பார்க்கலாமா...


காதலன் படத்துல முதல்ல பிரசாந்த் தான் ஹீரோ. எல்லாமே கமிட் பண்ணிட்டாங்க. காதலன் படம் உருவாகும்போது பிரசாந்த் தான் வேணும்னு சொல்லி ஷங்கர் சார் மைன்ட்ல பிக்ஸ் பண்ணிட்டாரு. இந்தக் கதை பிரசாந்துக்கு நல்லாருக்கும் அப்படின்னு நினைச்சாரு.

அப்போ காதலன் கதை உருவாகுது. நல்ல ஒரு லவ் மேட்டர். பிரசாந்தைக் கூப்பிட்டுப் பேசுறாங்க. பிரசாந்த் அப்போ பீக்ல இருக்காரு. சம்பளம் விஷயம் தான் இடிக்குது. அப்போ தயாரிப்பாளர் குஞ்சுமோன் சார்கிட்ட ஒரு விஷயத்தை சம்பளமா பேசிட்டீங்கன்னா அதுல இருந்து மாற மாட்டாரு.

1 லட்சம்னா அதுதான் கொடுப்பாரு. சிந்துநதிப்பூ படத்துல முதல்ல நெப்போலியன் தான் ஹீரோ. குஷ்பூ ஹீரோயின். அப்புறம் கவுண்டமணி. இந்த மூணு பேரு தான் படத்தோட ஸ்கிரிப்ட் உள்ளே வர்றது. நெப்போலியன் அப்போ 1 லட்ச ரூபா தான் சம்பளமா கேட்டாரு. அப்புறம் குஞ்சுமோன் ஓகே சொல்லிட்டாரு. ஆனா அதுக்கு அப்புறம் கார் டிரைவர், மேக்கப் செலவுக்காக கூடுதலா 10 ஆயிரம் ரூபாய் கேட்டாரு.

உடனே நெப்போலியனை படத்துல இருந்து தூக்கிட்டாரு குஞ்சுமோன். அப்புறம் ரஞ்சித் உள்ளே வந்தாரு. படம் சூப்பர்ஹிட். அதே மாதிரி காதலன் படத்துக்கு பிரசாந்த் சம்பளம் விஷயத்துல ஒண்ணும் பேசமாட்டாரு. எல்லாமே அவரோட அப்பா தியாகராஜன் தான். அவரு குஞ்சுமோன் கிட்ட பேசுறப்போ கொஞ்சம் அதிகமாக கேட்டாராம். 60 லட்சம்னு சொல்ல,

அதுக்கு முடியாதுன்னு 10லட்சத்துலயே அவரு நிக்க, அப்புறம் ஷங்கர் சார் பேசி 20 லட்சம் வரை கொண்டு வர பிரச்சனை முடியவே இல்லையாம். அப்போ பிரபுதேவா உள்ளே வர்றாரு. படத்துக்கு எல்லா பாட்டுக்கும் நானே கோரியாகிராபி பண்றேன்னு சொல்றாரு. அப்போ ஷங்கருக்கு ஒரு ஐடியா. ஏன் இந்தப் படத்துல புதுமுகமா பிரபுதேவாவையே போடலாமேன்னு வந்துருக்கு.


சம்பளம் எவ்வளவு வேணும்னு கேட்க ஒரு ரூபா கூட வேணாம்கறாரு. உடனே 1 லட்ச ரூபா கொடுத்து அவரையே ஹீரோவா போட்டாங்களாம். அப்படித் தான் காதலன் படம் உருவாகி பெரிய ஹிட் கொடுத்துச்சு. அதுக்குப் பிறகு அவரோட ரேஞ்சே வேற லெவலுக்குப் போயிடுச்சு. இன்னைக்கு வரைக்கும் நல்ல மார்க்கெட்ல இருக்காரு. பிரபுதேவா இப்போ வரை ஹீரோ தான். சமீபத்தில் கூட அவர் நடிப்பில் 'பேட்ட ராப்' வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது. 

Tags:    

Similar News