ஆட்டம் போட்ட நடிகை… எக்குத்தப்பா தெரிந்த விஷயம்… எம்ஜிஆர் செய்த செயலால் ஆடிப்போன படக்குழு

MGR: தமிழ் சினிமாவில் தற்போது அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினை பெரிய சர்ச்சையாக ஓடிக்கொண்டிருக்கிறது. பொதுவாக ஒரு துறை சார்ந்தவர்களின் முதலிடத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு கீழ் உள்ளவர்களை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் நியதி.

ஆனால் சமீபத்தில் தெலுங்கு சினிமாவில் நடந்த ஒரு விஷயம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் தெலுங்கு சினிமாக்களில் மாஸ் ஹிட் பாடல்களுக்கு நடன இயக்குனராக இருந்த ஜானிமாஸ்டர் தன்னுடன் உதவியாளராக இருந்த பெண்ணை மைனராக இருந்ததிலிருந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அவரை சினிமா சாம்பர் இடைக்கால தடை விதித்தது. இந்த புகார் மீதான நடவடிக்கை முடியும் வரை சான்னி மாஸ்டர் எந்த படங்களிலும் பணிபுரியக்கூடாது எனவும் அறிவிக்கப்பட்டது. அவர் உறுப்பினராக இருந்த பவன் கல்யாண் கட்சியில் இருந்தும் இறக்கப்பட்டார். இந்நிலையில் அவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இந்த விஷயம் தற்போது பூதாகரமாக மாறி இருக்கிறது. இது குறித்து பிரபல திரைவிமர்சகர் செய்யாறு பாலு கூறும் போது, தமிழ் சினிமாவின் புரட்சி கலைஞர் எம்ஜி ஆர் தன்னிடம் வேலை பார்த்தவர்களை எப்படி கண்ணியமாக பார்த்துக் கொண்டார் என்பது குறித்து பேசி இருக்கிறார். அது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவர் கூறும் போது, குடியிருந்த கோயில் படத்தில் ஆளங்குடி சோமு எழுதிய ஆடலுடன் பாடலை கேட்டேன் பாடல் ஷூட் தயாரானது. இதற்கு பஞ்சாபி நடனம் வைக்கப்பட்டது. ராஜஸ்ரீ மற்றும் எம்ஜிஆர் ஆடுவார்கள். ஒரு ஷாட்டில் ராஜஸ்ரீ சுற்றிக்கொண்டு வந்து அமர்வது போல காட்சி இருக்கும்.

அதுவும் ரிகர்சல் பார்த்துவிட்டு அந்த ஸ்டெப்பை ஆடிக்கொண்டு முடிக்கிறார். ஷூட்டிங் இருந்த அனைவரும் ஆச்சரியமாக அதை பார்த்து கைதட்ட அங்கிருந்த எம்ஜிஆர் மட்டும் ஒன்ஸ்மோர் என சத்தமிடுகிறார். எல்லோருக்கும் அதிர்ச்சி ஆனால் அவர் பேச்சை மீற முடியாது. உடனே மீண்டும் அதே போல் ராஜஸ்ரீ சுற்றி வந்த அமர்கிறார். இப்போதும் எம்ஜிஆர் ஒன்ஸ்மோர் என்கிறார்.

யாருக்கும் எதுவும் புரியவில்லை இருந்தும் மீண்டும் அதே காட்சி படமாகிறது. அதை முடித்த பின்னர்தான் எம்ஜிஆர் டேக் ஓகே என்கிறார். இது குறித்து ராஜஸ்ரீ அவரிடம் கேட்டபோது முதலில் நீ ஆடின காட்சிகளில் உன்னுடைய உள்ளாடை தெரிந்தது. அதை தேவையில்லாமல் நீக்க வேண்டும். இதனால்தான் அந்த காட்சியை மீண்டும் எடுக்க சொன்னேன் என்றாராம்.

Related Articles
Next Story
Share it