20 டியூனை ரிஜெக்ட் செய்த இயக்குனர்!.. வெறியாகி இளையராஜா போட்ட அந்த பாடல்!...

Ilayaraja: இளையராஜா திறமையான இசையமைப்பாளர் மட்டுமல்ல. மிகவும் வேகமாக வேலை செய்பவர். ஒரு படத்தின் 5 பாடல்களை அமைக்க ஒரு மணி நேரம், அல்லது 2 மணி நேரம் மட்டுமே எடுத்துக்கொள்வார். அதோடு, டியூன் ஓகே ஆன பின் மாலைக்குள் பாடலை ரிக்கார்டிங் செய்து கொடுத்துவிடுவார்.

ஒரு படத்திற்கு இசையமைக்க இளையராஜா எடுத்துக்கொள்ளும் நேரம் என்பது மிகவும் குறைவு. இப்போது வரை ரசிகர்களால் ரசிக்கப்படும் குணா படத்தின் பாடல்களை அமைக்க இளையராஜா எடுத்துக்கொண்டது 2 மணி நேரம்தான். மதியம் பாடலை ரெக்கார்டிங் செய்து கையில் கொடுத்துவிட்டாராம்.

குணா மட்டுமில்லாமல் இப்போதும் ரசிகர்களால் சிலாகிப்படும் பல படங்களுக்கு இசையமைக்க அவர் எடுத்துக்கொண்ட நேரம் மிகவும் குறைவு. மதிய உணவு வர தாமதமான இடைவெளியில் பி.வாசுவை அழைத்து இளையராஜா போட்ட 9 பாடல்கள்தான் சின்னத்தம்பியில் வந்து பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது.

அந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் பாடல்கள்தான் என்பது எல்லோருக்கும் தெரியும். ஒருபக்கம், இளையராஜாவிடம் அதிக நேரம் வேலை வாங்கிய இயக்குனர்களும் இருக்கிறார்கள். அதில் ஒருவர் ஆர்.கே.செல்வமணி. புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் என 90களில் பிரமாண்ட திரைப்படங்களை இயக்கியவர்.

rk selvamani

தமிழ் சினிமாவில் முதல் ஒரு கோடி சம்பளம் வாங்கிய இயக்குனர் இவர்தான். விஜயகாந்தை வைத்து இவர் இயக்கிய இரண்டு படங்களுமே மாஸ்டர் பீஸ்தான். இதில், கேப்டன் பிரபாகரனில் 2 பாடல்கள் மட்டுமே இருக்கும். இந்த படத்தின் ஒரு சூழ்நிலைக்கு டியூனை வாங்க ஆர்.கே.செல்வமணி இளையராஜாவிடம் போயிருக்கிறார்.

இளையராஜா 20 டியூன்களை போட்டும் செல்வமணிக்கு திருப்தி ஏற்படவில்லை. அதன்பின் ‘சார். நான் ஷோலே மாதிரி ஒரு படம் எடுக்குறேன். மெகபூபா மாதிரி ஒரு பாட்டு வேணும்’ என சொல்லிவிட்டு போய்விட்டாராம். அதை சவாலாக எடுத்த இளையராஜா இரவு முழுவதும் யோசித்து ஒரு டியூனை போட்டிருக்கிறார். அதுதான் மறைந்த பின்னணி பாடகி ஸ்வர்ணலதா பாடி பட்டி தொட்டியெங்கும் ஹிட் அடித்த ‘ஆட்டமா தேரோட்டமா’ பாடலாகும்.

Related Articles
Next Story
Share it