அஜீத்தை சினிமாவுக்குள் கொண்டு வந்ததே அவர்தானாம்... யாரு, எப்படின்னு தெரியுமா?
ஆரம்பத்தில அஜீத் சினிமாவுக்குள் வந்ததுக்குக் காரணமே இவர்தானா?
'தல' என்ற அடைமொழியுடன் தனக்கென தனிபாதையை வகுத்துக் கொண்டு வெற்றி நடைபோட்டு வருபவர் அல்டிமேட் ஸ்டார் அஜீத்குமார். இன்று தமிழ்சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார். தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி என இரு படங்களில் நடித்து வருகிறார்.
இவற்றில் விடாமுயற்சி படம் வரும் பொங்கலுக்கு அதாவது ஜனவரி 9ம் தேதி வெளியாகிறது. இப்போதும் அஜீத் படங்கள் என்றாலே பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. விஜய், அஜீத் என்ற போட்டோ போட்டியில் விஜய் தற்போது முழுநேர அரசியலுக்கு ஆயத்தமாகி வருவதால் அஜீத்தைத் தான் அனைவரும் அவரது படங்கள் எப்போ வரும்னு காத்து இருக்கின்றனர்.
திரைத்துறையில் இருந்தாலும் இன்னும் ரேஸிங்கில் ஆர்வம் குறையாமல் அவ்வப்போது நடக்கும் போட்டிகளில் கலந்து கொள்கிறார். தற்போது கூட துபாய் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் கார் பந்தயத்தில் கலந்து கொண்டுள்ளார்.
இதற்காக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூட வாழ்த்து தெரிவித்துள்ளார். அங்கு நடக்கும் போட்டிகளில் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் லோகோவைப் பயன்படுத்தி உலக அரங்கில் தமிழகத்தைத் தலைநிமிரச் செய்துள்ளார் என்று அவர் அஜீத்தை வாழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
அஜீத் ஆரம்பத்தில் 1990ல் என் வீடு என் கணவர் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். 1993ல் அமராவதி படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து அவர் ஆசை படத்தில் நடித்து பிரபலமானார். அதன்பிறகு வந்த படங்கள் அவரை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றன.
அவர் சினிமாவுக்குள் எப்படி வந்தார் என்பது சுவாரசியமான விஷயம். எஸ்.பி.பாலசுப்பிரமணியனின் மகன் எஸ்.பி.பி.சரண். இவரும், அஜீத்தும் ஒன்றாகப் படித்தவர்கள். ஆரம்பகாலகட்டத்தில் அஜீத்தைத் தெலுங்கு சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் பாடகர் எஸ்பிபி தான்.
அஜீத், சரண் இருவரும் நெருங்கிய நட்புடன் இருந்தனர். அஜீத்துக்கு விளம்பரப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்ததாம். அப்போது எஸ்.பி.பி.சரணின் உடைகளை அணிந்து கொண்டு தான் நடிக்க செல்வாராம். அந்தளவு இறுக்கமான நட்புடன் இருந்தாராம் தல அஜீத்.