நல்ல வைப்ல இருக்காரு போலயே தல! கையக் காட்டியே வெறுப்பேத்துறாரு.. வைரலாகும் அடுத்த புகைப்படம்

வைரலாகும் அஜித்தின் ரீசண்ட் கிளிக்.. கைல என்ன மாயம் வச்சிருக்காரோ?

Update: 2024-08-07 13:00 GMT

கோலிவுட்டில் சமீபகாலமாக சோசியல் மீடியாவில் இல்லாவிட்டாலும் இணையதளத்தில் பிஸியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் அஜித். நாள்தோறும் அஜித் சம்பந்தமான பல புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை சந்தோஷத்தில் வைத்துக் கொண்டிருக்கிறார் அஜித். இதுஒரு வகையில் ப்ரோமோஷனுக்கான யுத்தி என்றும் சொல்லப்படுகிறது.

அஜித் தற்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். அஜர்பைஜானில் படப்பிடிப்பை முடித்து விட்டு இப்போது ஐதராபாத்தில் கடைசி கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். ஐதராபாத்தில் நடக்கும் சூட்டிங்கில் அஜித் மற்றும் த்ரிஷா சம்பந்தமான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றது.

இன்னும் 10 நாள்கள் படப்பிடிப்பு இருக்க அதோடு விடாமுயற்சிக்கு குட்பை சொல்கிறார் அஜித். அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் இணைய இருக்கிறார். அந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படமாக இருக்கிறது.

ஒரு பக்கம் விடாமுயற்சி படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களுக்கு ட்ரீட் வைக்கும் அஜித் குட் பேட் அக்லியின் ஒரே போஸ்டரில் கடும் விமர்சனத்திற்கும் ஆளானார். குட் பேட் அக்லியின் முதல் போஸ்டரில் மூன்று அஜித் இருக்கும் மாதிரியான போஸ் வெளியானது.

அதில் ஒரு அஜித் கையை காட்டி போஸ் கொடுக்கும் மாதிரி அமைந்திருந்தது. அதில் இரட்டை அர்த்தம் உள்ளதாகவும் அஜித் எப்படி இதற்கு சம்மதம் தெரிவித்தார் என்ற கோணத்திலும் ரசிகர்கள் பேசி வந்தார்கள்.

இந்த நிலையில் சமீபத்தில் அஜித் இருக்கும் ஒரு புகைப்படம் இன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. அதில் ஒரு நண்பருடன் அஜித் பாபா முத்திரையுடன் கையை காட்டி போஸ் கொடுத்திருக்கிறார். இதை பார்த்த அனைவரும் என்ன தல ஒரே வைப்பில் இருக்கிறீர்கள் போல என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

எப்போதுமே அஜித் காஸுவலாக நின்று போஸ் கொடுப்பார். ஆனால் இந்த புகைப்படத்தில் முற்றிலும் வித்தியாசமாக இப்போதுள்ள கிட்ஸ் மாதிரி பாபா முத்திரை காட்டி வைப் செய்து வருகிறார் அஜித்.

Tags:    

Similar News