விளையாட்டு விபரீதமாயிருச்சே! பிரசாந்துக்கு ஃபைன் போட்டதற்கு பின்னாடி இந்த நடிகைதான் காரணமா?
ஹெல்மெட் அணியாமல் போன பிரசாந்துக்கு 1000 ரூபாய் அபராதமாக போலீஸ் தரப்பில் விதிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ் சினிமாவில் டாப் ஸ்டாராக இருப்பவர் நடிகர் பிரசாந்த். விஜய் அஜித்துக்கே ஒரு காலத்தில் டஃப் கொடுத்தார் பிரசாந்த். 90கள் காலகட்டத்தில் இவர்தான் முன்னணி ஹீரோவாக வலம் வந்தார். வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் அறிமுகமான பிரசாந்த் முதல் படத்திலேயே ப்ளாக் பஸ்டர் வெற்றியை அடைந்தார். அந்த வெற்றியின் தொடர்ச்சி அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க காரணமாக இருந்தது.
தொடர்ந்து சூப்பர் ஹிட் படஙக்ளையே கொடுத்து வந்த பிரசாந்துக்கு பெண்கள் மத்தியில் பெரிய அளவு கிரேஸ் இருந்தது. இன்று அரவிந்த்சாமி மற்றும் அஜித்தை அழகிற்கு முன்னுதாரணமாக கூறிவரும் ரசிகர்கள் இவர்களுக்கு முன்பே பிரசாந்தைத்தான் அந்தளவுக்கு வர்ணித்தார்கள்.
ஜோடி, ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள் போன்ற படங்கள் அனைத்து தரப்பினருக்கும் பிடித்தமான பிரசாந்தின் படங்களாக மாறின. மேலும் பிரசாந்துக்கு ஒரு பெஸ்ட் ஆன் ஸ்கிரீன் பேராக சிம்ரனைத்தான் அனைவரும் விரும்பினார்கள். கிட்டத்தட்ட சிம்ரன் - பிரசாந்த் ஜோடிதான் அதிக படங்களில் நடித்திருக்கிறார்கள்.
இப்போது அவர்கள் காம்போவில் அந்தகன் படம் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு வெளியாக இருக்கிறது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸ் என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால் இப்போது ஆகஸ்ட் 9 ஆம் தேதி ரிலீஸ் என்று சொல்லப்படுகிறது.
அந்தப் படத்தின் ப்ரோமோஷனில் பிரசாந்த் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அவரை நேற்று பேட்டி கண்ட போது தொகுப்பாளினியை தன் பைக் பின்னாடி உட்காரவைத்து போற போக்கிலே கேள்விகளுக்கும் பதில் சொல்லி வந்தார் பிரசாந்த். ஆனால் பைக் ஓட்டும் போது பிரசாந்த் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டினார்.
இதனால் பிரசாந்துக்கு 1000 ரூபாய் அபராதமாக நீதிமன்றம் விதித்தது. இந்த நிலையில் திருச்சியில் இன்று ப்ரோமோஷனுக்காக சென்றா பிரசாந்திடம் இதை பற்றி ஒரு நிரூபர் கேட்டார். அதற்கு பதில் அளித்த பிரசாந்த் ‘இந்த கேள்வியை கண்டிப்பாக கேட்பீர்கள் என எனக்கு தெரியும். அதற்காக முழுவதும் என்னை தயார்படுத்திக் கொண்டுதான் வந்திருக்கிறேன்’ என கூறினார்.
மேலும் அவர் கூறும் போது கடந்த சில வருடங்களாகவே நான் ஹெல்மெட் அணிவதை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறேன். என் சொந்த செலவில் நிறைய பேருக்கு ஹெல்மெட்டும் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். இப்பொழுது எனக்கு விதித்த அபராதமும் ஒரு விழிப்புணர்வாக இருக்கட்டும் என பிரசாந்த் கூறினார். அப்போது அருகில் இருந்த ப்ரியா ஆனந்த் ‘ஐயோ நான்தான் அவரை டேர் செய்திருந்தேன். ஹெல்மெட் அணியாமல் போக முடியுமா? என சவால் விட்டிருந்தேன்’ என கூறினாராம்.