விஜய் படத்தில் டெக்னீசியனாக வேலை பார்த்தாரா? செய்யாத தவறுக்காக வெளியேறிய சூரி
உழைப்பிற்கு பின்னாடிதான் ஊதியம் இருக்குனு சொல்வாங்க.. அது சூரியின் விஷயத்தில் மிகச்சரியாக உள்ளது.
ஒரு நகைச்சுவை நடிகராக பல முன்னணி நடிகர்களின் படங்களில் கலக்கி வந்த சூரி இப்போது அந்த நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் ஹீரோவாக மாறியிருக்கிறார்.வெண்ணிலா கபடிக் குழு திரைப்படம் சூரியை அடையாளப் படுத்திய திரைப்படம். அதில் பரோட்டா காமெடிக் காட்சியில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். அதிலிருந்தே பரோட்டா சூரி என்றழைக்க ஆரம்பித்தனர்.
அந்த பெயரைத்தான் நீண்ட நாளாக தக்க வைத்திருந்தார் சூரி. அதன் பிறகு அவருக்குள்ளும் ஒரு நடிகன் இருக்கிறான் என்று தெரிந்த வெற்றிமாறன் தன்னுடைய விடுதலை படத்தில் சூரியை நாயகனாக்கினார். அதுவரை ஒரு காமெடி பீஸாகவே பார்த்து வந்த சூரிக்குள் இப்படி ஒரு நடிகன் இருக்கிறாரா என்பதையும் ஆச்சரியப்பட வைத்தது.
விடுதலை படத்தின் வெற்றி சூரியை எங்கேயோ கொண்டு சென்றது. அதனை அடுத்து கருடன் திரைப்படம் சூரியை ஒரு பெரிய நடிகனாகவே மாற்றியது. இப்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கொட்டுக்காளி திரைப்படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார் சூரி.
இந்த நிலையில் சூரி விஜய் படத்தில் தான் ஒரு டெக்னீசியனாக வேலை பார்த்ததாக கூறியிருக்கிறார். விஜய், ரம்பா நடிப்பில் வெளியான என்றென்றும் காதல் படத்தில் டெக்னீசியனாக வேலைப் பார்த்து வந்தாராம் சூரி.
அப்போதுதான் விஜயை முதன் முதலில் பார்க்கிறாராம் சூரி. ஸ்டேஜுக்கு தேவையான லைட்டிங் செட்டப் எல்லாம் சூரிதான் பார்த்துக் கொண்டாராம். லைட்டை ஆன் பண்ணவோ ஆஃப் பண்ணவோ எல்லா கண்ட்ரோலும் சூரியிடம்தான் இருந்ததாம்.
அப்போது விஜய் சம்பந்தப்பட்ட ஒரு காட்சியை ஒரே ஷாட்டில் எடுத்துக் கொண்டிருந்தார்களாம். இந்தப் பக்கம் லைட் கண்ட்ரோலை சூரி கையில் பிடித்துக் கொண்டிருந்தாராம். திடீரென சூரியின் முதலாளி அங்கு வர அந்த கண்ட்ரோலை அமிழ்த்தி விட்டாராம். உடனே லைட் ஆஃப் ஆகிவிட்டதாம்.
உடனே சூரியின் முதலாளி சூரியிடம் ‘டேய் நான் செஞ்சதா சொல்லாத. நீ பண்ண மாதிரியே இருக்கட்டும். நான் உன்னை சும்மா திட்டுற மாதிரி திட்டுறேன்’ என கூறி சூரியை திட்டினாராம். அதுமட்டுமில்லாமல் அங்கு இருந்த அனைவரும் சூரியை திட்டிக் கொண்டே இருந்தார்களாம். பின் சூரி முதலாளியிடம் ‘உங்களுக்கு அறிவே கிடையாதா?’ என்ற ஒரு கேள்வியை மட்டும் கேட்டாராம். உடனே செட்டில் இருந்து சூரி வெளியேற்றப்பட்டாராம்.