என்னை அசிங்கப்படுத்தி.. அவமானப்படுத்தி! நடிகையை பற்றி விஜய் ஆண்டனி குமுறல்

விஜய் ஆண்டனிக்குள் இவ்ளோ வருத்தம் இருக்கா? ரிஜக்ட் செய்த நடிகை

Update: 2024-08-07 13:00 GMT

தமிழ் சினிமாவில் இசையில் தனக்கென தனி இடம் பிடித்து இப்போது நடிகராகவும் மாஸ் காட்டி வருகிறார் விஜய் ஆண்டனி. இப்போதும் இளைஞர்கள் மத்தியில் இவரின் இசைக்கும் பெரும் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். ஆடாதவரையும் இவர் இசையின் மூலம் ஆட வைப்பார் விஜய் ஆண்டனி. சொல்லப்போனால் விஜய் ஆண்டனியின் இசையைத்தான் அனைவரும் மிஸ் செய்கிறார்கள்.

ஒவ்வொரு பாடலும் ஹிட் லிஸ்ட்டில் இருக்கும் பாடலாகவே அமைந்திருக்கின்றன. இன்னொரு பக்கம் நடிகராக பல நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தும் வருகிறார். ஹீரோவாக அறிமுகமாகி தொடர்ந்து ஒரு மூன்று படங்கள் ஹிட் கொடுத்து ரசிகர்கள் மத்தியில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாறினார் விஜய் ஆண்டனி.

தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் .சமீபத்தில் கூட மழை பிடிக்காத மனிதன் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கும் விஜய் ஆண்டனி அந்தப் படத்தை பற்றி பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டிக் கொடுத்து வருகிறார்.

விஜயகாந்த் இருக்கும் போதே படம் முடிந்து வெளியாக வேண்டியது. இந்தப் படத்தில் எப்படியாவது விஜயகாந்தை நடிக்க வைக்க வேண்டும் என்ற முயற்சியிலும் இருந்தார்கள். ஆனால் அந்த நேரத்தில்தான் விஜயகாந்தின் உடல் நிலை மிகவும் மோசமானது. அதனால்தான் கொஞ்சம் படம் தாமதமானது.

கடைசியில் விஜயகாந்த் நம்மை விட்டு பிரிய அவரை ஏ.ஐ மூலமாவது படத்தில் கொண்டுவர வேண்டும் என நினைத்தார்கள். ஆனால் கேப்டன் குடும்பம் அதற்கு சம்மதம் தெரிவிக்க வில்லை. இப்போது அந்த கேரக்டரில் வேறொரு நடிகரை வைத்து படத்தை முடித்திருக்கின்றனர்.

படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்திருக்கிறார். படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் மேகா ஆகாஷை பற்றி விஜய் ஆண்டனி கூறும் போது ‘ஏற்கனவே இதற்கு முன் ஒரு படத்தில் என்னை ரிஜக்ட் பண்ணிட்டாங்க மேகா’ என கூறினார்.

அதற்கு மேகா ‘ரிஜக்ட் எல்லாம் பண்ணல. அதே நேரத்தில் வேறொரு படம் கையில் இருந்தது. அதனால்தான் நடிக்க முடியவில்லை’ என கூறினார். இருந்தாலும் விஜய் ஆண்டனி ‘இல்ல. இல்ல. ரிஜக்ட் பண்ணிட்டாங்க. அதனால எனக்கு எவ்வளவு வருத்தம் தெரியுமா? ’என கூறி சம்பந்தப்பட்ட சேனல் பெயரை குறிப்பிட்டு வெளிப்படையாக சொல்கிறேன். போட்டுக்கோங்க என சொல்லி ‘மனமுடைந்த விஜய் ஆண்டனி. ஒதுக்கி தள்ளிய மேகா ஆகாஷ்’ என கிண்டலாக கூறினார்.

மேலும் ‘இருந்தாலும் இப்ப நாங்க நண்பர்களாயிட்டோம். அதெல்லாம் பழசு. அப்போ என்ன அசிங்கப்படுத்தியிருக்கலாம். என்னெல்லாமோ செஞ்சிருக்கலாம். ஆனால் இப்போ நாங்க அப்படி இல்ல.’ என மிகவும் ஜாலியாக மேகாவிடம் ஃபன் செய்தார் விஜய் ஆண்டனி.

Tags:    

Similar News