வீட்டு லோன் கட்ட காசு இல்ல! அதுக்காகவே அந்த படத்துல நடிச்சேன்.. வெளிப்படையாக கூறிய ப்ரியா ஆனந்த்
ப்ரியா ஆனந்த் தனியாகத்தான் இருக்கிறார். காசு இல்லாமல் ஒரு படத்துல நடிச்சதை பற்றி கூறியிருக்கிறார் பாருங்க
தமிழ் சினிமாவில் ஒரு வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ப்ரியா ஆனந்த். தமிழில் இவர் ஒரு சில படங்களில் நடித்தாலும் ரசிகர்களின் அபிமானங்களை பெற்ற நடிகையாக பார்க்கப்படுகிறார். மக்கள் மனதில் நின்று பேசக் கூடிய கதாபாத்திரத்திலேயே நடித்திருக்கிறார் ப்ரியா ஆனந்த்.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம் என பிற மொழிப் படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழில் லியோ படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதன் பிறகு லீடு ரோலில் பிரசாந்துடன் இணைந்து அந்தகன் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.
அந்தகன் படத்தை பொறுத்தவரைக்கும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸாக இருக்கின்றது. இந்தப் படத்தில் பிரசாந்த் ,ப்ரியா ஆனந்த்துடன் சேர்ந்து சிம்ரன், கார்த்திக் போன்ற ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே இருக்கிறார்கள்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு அந்தகன் திரைப்படம் வெளியாகுவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படுபிஸியாக இருக்கிறார் பிரசாந்த். கூடவே ப்ரியா ஆனந்தும் கலந்து கொண்டார்,
ப்ரியா ஆனந்தை பொறுத்தவரைக்கும் அவருக்கு பிடித்த ஃபேவரைட் நடிகர் என்றால் கன்னடாவில் புனித் ராஜ்குமார் என்றும் அவரின் கடைசி படத்தில் நான்தான் ஹீரோயினாக நடித்தேன் என்றும் கூறினார்.
மேலும் தமிழில் அவருக்கு பிடித்தமான ஹீரோ என்றால் அது மிர்ச்சி சிவா என்று கூறியிருக்கிறார். மிர்ச்சி சிவாவுடன் இணைந்து மூன்று படங்களில் நடித்திருக்கிறாராம் ப்ரியா ஆனந்த். அவர் மிகவும் ஜாலியானவர் என்றும் சுற்றியிருப்பவர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்வார் என்றும் ப்ரியா ஆனந்த் கூறினார்.
மேலும் காசுக்காக வேற வேலை எதுவும் பார்த்திருக்கிறீர்களா? என கேட்ட போது இதை விட காசு எங்கு அதிகமாக தருகிறார்கள் என சினிமாவை பற்றி கூறிய ப்ரியா ஆனந்த் ‘காசுக்காவே ஒரு படத்தில் நடித்தேன். அந்த நேரத்தில் வீட்டுக்காக லோன் கட்ட வேண்டிய கட்டாயத்தில் இருந்தாராம்.’ அதனாலேயே கதை எதுவும் கேட்காமல் ஒரு படத்தில் நடித்தேன் என்று ப்ரியா ஆனந்த் கூறினார்.