கவினுக்கு கண்டிப்பா இது ஹிட்டு!... சர வெடியா வெடிக்கும் ‘பிளடி பெக்கர்’ டிரெய்லர் வீடியோ!...
Bloddy beggar: விஜய் டிவி மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்த பலரில் கவினும் ஒருவர். விஜய் டிவியில் சில சீரியல்களில் நடித்தார். அதன்பின் சில திரைப்படங்களில் கதாநாயகனின் நண்பர்களில் ஒருவராக நடித்தார். ஒரு கட்டத்தில் ஹீரோவாக மாறினார். நட்புன்னா என்னன்னு தெரியுமா, லிப்ட், டாடா, ஸ்டார் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார்.
இதில், டாடா திரைப்படம் அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தில் சிறப்பான நடிப்பையும் கவின் கொடுத்திருந்தார். இந்த படம் ஹிட் அடித்ததால் அவருக்கு தொடர் வாய்ப்புகள் வந்தது. ஸ்டார் திரைப்படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் புரமோஷனும் செய்யப்பட்டது.
படத்திலும் கவினை பில்டப் செய்து வைத்திருந்தார்கள். அதுவே, படத்திற்கு எமனாக மாறியது. எனவே, அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இயக்குனர் நெல்சனின் தயாரிப்பில் பிளடி பெக்கர் என்கிற படத்தில் நடித்திருக்கிறார் கவின். சில நாட்களுக்கு முன்பு இப்படம் தொடர்பான ஒரு வீடியோவும் வெளியானது.
இந்த படத்தில் பிச்சைக்காரனாக நடித்திருக்கிறார் கவின். இந்நிலையில்தான் பிளடி பெக்கர் படத்தின் டிரெய்லர் வீடியோ இப்போது வெளியாகியுள்ளது. ஒரு பெரிய பங்களாவுக்குள் திருட்டுத்தனமாக நுழைகிறார் கவின். ஆனால், அவரை தனது சுயலாபத்திற்காக வில்லன் பயன்படுத்திக்கொள்கிறான்.
கவினை பணக்கார வாலிபனாக நடிக்க வைக்கிறார்கள். கவின் அதை எப்படி சமாளித்தார். அங்கு என்ன குழப்பம் நடந்தது என்பதை காமெடி கலந்த சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் சொல்லி இருக்கிறார்கள். போர்த்தொழில் படத்தில் சைக்கோ வில்லனாக கலக்கிய நடிகர்தான் இதில் வில்லனாக நடித்திருக்கிறார்.
பிளடி பெக்கர் திரைப்படத்தின் டிரெய்லர் வீடியோ ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த படம் தீபாவளி ரிலீஸாக வருகிற 31ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.