100 கோடி வசூல்னாலும் தனுஷுக்கு ஒன்னுமில்லாம போச்சே!.. கலாநிதிமாறன்தான் காரணமா?!...
ராயன் படம் சூப்பர் ஹிட் அடித்தும் தனுஷுக்கு பெரிய சம்பளம் இல்லை என சொல்லப்படுகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடித்துள்ள திரைப்படம் ராயன். இது தனுஷின் 50வது திரைப்படமாகும். இந்த படத்தில் தனுஷின் தம்பிகளாக காளிதாஸ் ஜெயராம் மற்றும் சந்தீப் கிஷணும், தங்கையாக துஷரா விஜயனும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
ராயன் திரைப்படம் கடந்த 26ம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆனது. பெற்றோர்கள் எங்கு போனார்கள் என தெரியாத நிலையில் சொந்த ஊரில் சிறுவனாக இருக்கும் தனுஷ் ஒரு கொலையை செய்துவிட்டு தம்பிகள் மற்றும் தங்கைடன் சென்னைக்கு வருகிறார். அங்குள்ள இரண்டு கேங்ஸ்டர் கும்பலால் அவருக்கு பிரச்சனை ஏற்படுகிறது.
எஸ்.ஜே.சூர்யாவும், சரவணனும் அந்த இரண்டு கேங்ஸ்டர் கும்பலின் தலைவர்களாக நடித்திருக்கிறார்கள். தனுஷை எப்படியாவது போட்டு தள்ள அவர்கள் திட்டம்போட, அந்த இரண்டு கும்பலையும் மோதவிட்டு அவர்களே அடித்துக்கொண்டு சாகட்டும் என போலீஸ் அதிகாரி பிரகாஷ்ராஜ் ஒருபக்கம் காய் நகர்த்த தனுஷ் என்ன செய்கிறார் என்பதுதான் கதை.
படம் முழுக்க ஏராளமான வன்முறை காட்சிகள் இருக்கிறது. படத்திற்கு ஏ சான்றிதழும் கொடுக்கப்பட்டது. ஒருபக்கம் படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்களும் வந்தது. கதை எங்கே நடக்கிறது, எப்போது நடக்கிறது.. எதனால் நடக்கிறது என்கிற பல கேள்விகளுக்கும் படத்தில் பதில் இல்லை. பல காட்சிகளில் லாஜிக்கும் இல்லை.
ஆனாலும், ராயன் திரைப்படம் ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது. இந்த படத்திற்கு நல்ல அட்வான்ஸ் புக்கிங்கும் இருந்தது. அதோடு, படம் வெளியாகி தொடர்ந்து நல்ல வசூலை பெற்றது. படம் வெளியான அடுத்தநாளே தனுஷ் அப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகளுக்கு பார்ட்டி கொடுத்தார். மேலும், டிவிட்டரில் ரசிகர்களுக்கு நன்றியும் சொன்னார்.
படம் வெளியாகி 6 நாட்களில் இப்படம் 100 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. ஆனால், சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக தனுஷ் ஒரு படத்தை இயக்க ஒப்புக்கொண்டது சில வருடங்களுக்கு முன்பு. தனுஷ் இப்போது 50 கோடி வரை சம்பளம் கேட்கிறார். ஆனால், ராயன் இப்போது எடுக்கப்பட்டாலும் தனுஷுக்கு பழைய சம்பளம்தான் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். படத்தின் மொத்த பட்ஜெட்டே 50 கோடிதானாம். ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு எடுத்து கொடுத்திருக்கிறார் தனுஷ்.
தற்போதைய சம்பளம் இல்லை என்றாலும் ஒரு இயக்குனராக வெற்றி பெற்றதே தனுஷுக்கு சந்தோஷம் என்பதில் சந்தேகமில்லை.