கெட்ட வார்த்தையைக் கூட அழகாகக் காட்டிய இயக்குனர்.... மெய்யழகனா அது?

மெய்யழகன் தஞ்சாவூர் கதை. நீடாமங்கலம் பகுதியில் கதை நடக்கிறது. படம் நவீன சூழலுக்குப் பழக்கப்பட்ட ஒருவன் மீண்டும் தனது சொந்த கிராமத்துக்கு வர்றான். அந்த சூழல் எப்படி இருக்குங்கறது தான் படம்.

குறிப்பா தன்னோட மனைவியின் தம்பி கார்த்தியிடம் அவர் பேசுவது. கார்த்தி தஞ்சை பகுதியின் பாஷையைப் பேசுவதும், அரவிந்தசாமி நகர்ப்புறத்தில் இருந்து ஊருக்கு வருகையில் இருவருக்குமான சமூகப்புரிதலின் இடைவெளி அழகியலாக சொல்லப்பட்டுள்ளது.

96 படத்தின் இயக்குனர் பிரேம்குமார் தான் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் கார்த்தியின் இன்னோசென்ஸ் ரொம்ப அழகாக இருக்கு. அதை விட்டு விலகுறவன் வாழ்க்கையில் எல்லா விஷயத்தையும் ரசிக்க மாட்டான். கார்த்தி, அரவிந்தசாமி ரெண்டு பேரும் பேசுற டயலாக்குகள் ரொம்பவே சுவாரசியமா இருக்கு. பாத்ரூம் தான போறீங்க.

'ஒண்ணுக்கா, ரெண்டுக்கா'ன்னு கேட்பது அந்த இன்னோசென்ஸ் இன்னும் சாகாம அவ்ளோ அழகா இருக்கு.



கெட்ட வார்த்தையைக் கூட ரசிக்கிற படி படத்தின் இயக்குனர் காட்சியை அழகாக எடுத்துருக்காரு. ஒரு காட்சியில் அரவிந்தசாமியை லேசா எழுந்திருக்கச் சொல்வாரு.

அப்படி சொல்றதுக்கு 'உங்க சூத்தாம்பட்டியைக் கொஞ்சம் தூக்குங்க'ன்னு சொல்வாரு. இதை அவர் கெட்ட வார்த்தையாகச் சொல்லல. கிண்டல் அடிக்கணும்னும் சொல்லல. ஆனா இயல்பாகவே சொல்லி இருப்பது தான் அழகு. ரொம்ப அழகாக அந்தக் கதாபாத்திரத்தை வடிவமைத்து இருக்கிறார் இயக்குனர்.

அதற்கு கனகச்சிதமாகப் பொருந்தும் அளவு கார்த்தியும் அச்சு அசலாக நடித்து இருக்கிறார். இருவரும் இணைந்து பாடும் இந்த மான் என்ற இளையராஜாவின் பாடல், ராமராஜன் பாடலைப் பாடும்போது அவ்வளவு அழகா இருக்கு. இரண்டரை மணி நேரம் ஒரு கிராமத்துக்குள்ள ஒரு குடும்பத்துக்குள்ள போயிட்டு டிராவலாயிட்டு வரலாம். வெறுப்புணர்ச்சி, வன்முறை உணர்ச்சி, தேவையில்லாத பேதம், செக்ஸ் உணர்வைத் தூண்டும் வகையில் உள்ள படங்கள் மத்தியில் இயல்பான அழகான படமாக இது உள்ளது.

கார்த்தி சொல்றாரு. 'அது இறந்த காலம் இல்ல. நாம இழந்த காலம்'னு சொல்வது அருமையாக இருக்கும். கமலின் சொந்தக் குரல் பாட்டு ரொம்ப அபாரமாக உள்ளது. இளையராஜாவுக்கும், அவருக்கும் அப்பவே இந்த வரிகளை நான் தான் பாடுவேன்னு போட்டி வருமாம். கமலின் வாய்ஸைக் கேட்கும்போதே இந்தக்கதையின் கனத்தைத் தாங்கி வரும் பாடலாகவே உள்ளது என்பது புரிகிறது. பழைய நினைவுகளை மீட்டி எடுக்கும் வீணையாக இந்தப் படம் இருக்கும்.

அதை நான் பார்த்துக்கறேன்னு சொல்லும்போது உங்க சூத்தாம்பட்டியைக் கொஞ்சம் தூக்குங்கன்னு கார்த்தி சொல்வாரு. மேற்கண்ட தகவலை பிரபல பத்திரிகையாளரும், சினிமா விமர்சகருமான ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்.

Related Articles
Next Story
Share it