அசத்தலா நடந்து முடிந்த தளபதி 69 பட பூஜை!.. ஸ்மார்ட்டா இருக்காரே தளபதி!. போட்டோஸ் உள்ளே!...

தளபதி 69 பட பூஜை தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

By :  Murugan
Update: 2024-10-04 11:57 GMT

thalapathy69

Thalapathy 69: கோட் படத்திற்கு பின் ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இது அவரின் 69வது திரைப்படமாகும். விஜய் அரசியலுக்கு போவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது அவரின் கடைசிப்படம் என எல்லோராலும் சொல்லப்படுகிறது.

ஆனால், 2026 சட்டமன்ற தேர்தல் ரிசல்ட்டுக்கு பின் விஜய் எப்படியும் மீண்டும் சினிமாவில் நடிக்க வருவார் என்றும் சிலர் நம்புகிறார்கள். பல சினிமா செய்தியாளர்களும் அதை சொல்லி வருகிறார்கள். விஜய் என்ன முடிவெடுக்கப்போகிறார் என்பது தெரியவில்லை.


விரைவில் விஜயின் காட்சி மாநாடும் நடைபெறவிருக்கிறது. விஜயின் கட்சியினர் அதற்கான வேலைகளை மும்முரமாக செய்து வருகின்றனர். இந்நிலையில், தளபதி 69 படத்தின் பூஜை இன்று சென்னையில் நடந்து முடிந்திருக்கிறது. அனேகமாக, ஒரு திருமண மண்டபத்தில் இந்த பூஜை நடந்திருக்கலாம் என கணிக்கப்படுகிறது.


இந்த விழாவில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாலிவுட் நடிகர் பாபி தியோல் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் மற்றும் மலையாள நடிகர் நரேன் ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டாலும் அவர்கள் இந்த பூஜையில் கலந்து கொள்ளவில்லை.


விஜய், திருமண விழாவில் கலந்து கொள்வது போல பட்டு வேஷ்டி சட்டை அணிந்து கலந்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களை இப்படத்தை தயாரிக்கும் கேவிஎன் நிறுவனமே தனது சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டிருக்கிறது. இந்த புகைப்படங்களை வழக்கம்போல் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.



 


Tags:    

Similar News