2024 தமிழ்த்திரை உலகில் கலக்கிய நடிகைகள் லிஸ்ட்... உங்களோட பேவரைட் யாரு?
தமிழ்த்திரை உலகில் 2024ல் எந்தெந்த கதாநாயகிகளுக்கு என்னென்ன படங்கள் வந்துருக்கு. அதுல நிறைய படங்கள் நடிச்சது யாரு? உங்களோட ஃபேவரைட் யாருன்னு பார்க்கலாமா...
பார்வதி - சாய்பல்லவி
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான தங்கலான் படத்தில் பார்வதி அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். நாலு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்து அசத்தி இருந்தார்.
அக்டோபர் 31ல் தீபாவளியையொட்டி சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் வெளியானது. இந்தப் படத்தில் சாய்பல்லவியின் நடிப்பு பிரமாதமாக இருந்தது. இவருக்கு ரசிகர்களின் பேராதரவு கிடைத்தது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். 400 கோடி வசூல் செய்தது.
வாழை படத்தில் அம்மா வேடத்தில் நடித்திருந்த ஜானகி அருமையான யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தினார்.
துஷாரா விஜயன் - சினேகா
நடிகர் தனுஷ் நடித்து இயக்கிய அவரது 50வது படம் ராயன். இதில் துஷாரா விஜயன் தனுஷ+க்கு தங்கையாக நடித்து இருந்தார். துணிச்சல்மிக்கவராக நடித்து அசத்தினார். கோட் படத்திற்காக சினேகா நடித்துள்ளார். வெங்கட்பிரபு இயக்கம், விஜய் நடிப்பு என மாஸ் ஹிட்டான படம் இது. ரசிகர்களால் மிகவும் பாராட்டப்பட்டார்.
தமன்னா - பிரியா பவானி சங்கர்
அரண்மனை 4 படம் மூலம் இதுவரை ரசிகர்கள் பார்த்திராத தமன்னாவைப் பார்க்க முடிந்தது. அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். சுந்தர்.சி. இயக்கி இருந்தார். டிமான்டி காலனி 2 படத்தில் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மிகவும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்தியன் 2 படத்திலும் நடித்து இருந்தார்.
சுவாசிகா - ஊர்வசி
லப்பர் பந்து சுவாசிகா. சின்ன பட்ஜெட்ல வெளியான பெரிய வெற்றிப்படம். கெத்து மனைவி கேரக்டரில் நடித்து அசத்தி இருந்தார். ஊர்வசி, ஜேபேபி படத்திற்காக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். எப்படிப்பட்ட நடிப்பா இருந்தாலும் அசத்துவார் இவர்.
பிரியா மோகன் - இவானா
பிரியா மோகன் அக்டோபர் 31, தீபாவளிக்கு ஜெயம் ரவி நடித்த பிரதர் படம் வெளியானது. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். தெலுங்கில் இருந்து தமிழ் திரை உலகுக்கு வந்தவர்.
லவ் டுடே, மதிமாறன் ஆகிய படங்களில் நடித்த நடிகை இவானா. இவர் 2024ல் கள்வன் படத்தில் நடித்துள்ளார். பி.வி.சங்கர் இயக்கிய இந்தப் படம் ஏப்ரல் 4ல் வெளியானது. ஜி.வி.பிரகாஷ்குமார் தான் இந்தப் படத்தில் ஹீரோ. பாரதிராஜாவும் நடித்துள்ளார். அதே போல நடிகை காயத்ரி ஷங்கருக்கு பேச்சி, மெர்ரி கிறிஸ்துமஸ் என இருபடங்கள் வந்துள்ளன.
பிரியா பவானி ஷங்கர் - கீர்த்தி சுரேஷ்
2024ல் இந்தியன் 2, டிமாண்டி காலனி 2, ரத்னம், பிளாக் ஆகிய படங்களில் பிரியா பவானி ஷங்கர்நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ் ரகு தாத்தா, சைரன், பேபி ஜான், கல்கி கிபி 2898 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
காஜல் அகர்வால் - ராஷ்மிகா மந்தனா
காஜல் அகர்வால் கண்ணப்பா, நா சாமி ரங்கா, சத்யபாமா, இந்தியன் 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா சுகுமார் இயக்கத்தில் வெளியான புஷ்பா 2 படத்தில் நடித்து பட்டையைக் கிளப்பினார். அல்லு அர்ஜ+னுக்கு ஜோடியாக நடித்து அசத்தி இருந்தார்.
திரிஷா - நயன்தாரா
திரிஷா 2024ல் விஜய் நடித்த கோட் படத்தில் நடித்துள்ளார். மட்ட என்ற ஒரு பாடலுக்கு மட்டும் கேமியோ ரோலில் நடித்துள்ளார். லேடி சூப்பர்ஸ்டாரான நயன்தாராவுக்கு படம் எதுவும் வரவில்லை. என்றாலும் அவருடைய திருமண ஆவணப்படம் பெரிய சர்ச்சைக்கு இடையில் வெளியானது.