300 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராகும் சிம்பு படம்? கேப் விழாமல் இருக்க நடிகரின் ஐடியா

லிட்டில் சூப்பர்ஸ்டாராக களம் இறங்கிய சகலகலா வல்லவ நடிகரின் வாரிசு தான் சிம்பு. இவர் ஆரம்பத்தில் தன் தந்தையைப் போல ஹேர் ஸ்டைல், மேனரிசம் காட்டி குழந்தை நட்சத்திரமாக வந்து ரசிகர்களைக் கவர்ந்தார்.

ஹீரோவானதும் விரல் வித்தைக்காரர்; என ரசிகர்களும், பத்திரிகையாளர்களும் விமர்சித்தனர். சக நடிகராக வந்த தனுஷ் படங்களுடன் போட்டிப் போட்டு நடித்து வந்தார். மன்மதன் படத்தில் மாறுபட்ட இரு வேடங்களில் நடித்து இயக்கவும் செய்தார்.

படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்தார். மாநாடு இவரை வேற லெவலுக்கு எடுத்துச் சென்றது. அதன்பிறகு தக் லைஃப் படத்தில் மணிரத்னம், கமல் காம்போவுடன் இணைந்தார். அவரது வெற்றிப்பயணம் மாஸாக இருந்தது.

தொடர்ந்து பிசி நடிகராகி விட்டார். ஆரம்பத்தில் சூட்டிங்கிற்கு ஒழுங்காக வர மாட்டார் என்ற இவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இப்போது இவர் ரொம்பவே மாறி விட்டார். பக்குவப்பட்ட மனிதராகி விட்டார். சினிமாவில் அனைத்து விஷயங்களையும் உலகநாயகன் கமல் போல விரல் நுனியில் தெரிந்து வைத்துள்ளாராம்.

சிம்புவைப் பொருத்தவரை அவருக்கு இப்போதைக்கு படத்தை இயக்கும் எண்ணம் இல்லை. தக் லைஃப் முடித்து விட்டார். அடுத்ததாக ஜூடு அண்டனி ஜோசப் இயக்கத்தில் படம் பண்றதாக இருக்கிறார். எஸ்டிஆர் 48 படத்துக்கு 150 நாள்களுக்கு சிம்புவோட தேதி மட்டுமே தேவைப்படுது. 300 கோடி பட்ஜெட். பெரிய நிறுவனம் தயாரிக்கிறதா இருக்கு.



25 வயசுப் பையனா நடிக்கிறாரு. 150 நாள் அப்படிங்கறது உடனே சாத்தியமில்லை. தக் லைஃப் பொங்கலுக்கு வருதான்னு தெரியல. அதனால லாங் கேப் விழுந்துடக்கூடாதுன்னு இடையில ஒரு படம் பண்றாரு.

ஓ மை கடவுளே இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்துபடத்தில் நடிக்க உள்ளாராம் சிம்பு. தக் லைஃப் சூட்டிங் முடிந்துவிட்டது. அநேகமா நவம்பர், டிசம்பரில் சூட்டிங் கிளம்புறார்களாம். வேல்;ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்களாம்.

இது முடிஞ்ச உடனே தேசிங்கு பெரிய சாமியோட படம் சிம்புவுக்கு இருக்கு. மேற்கண்ட தகவலை பிரபல பத்திரிகையாளர் சபையர் தெரிவித்துள்ளார்.

Related Articles
Next Story
Share it