ஜெயம் ரவிக்கு இப்படி ஒரு செக்கா? பெரிய தொகையை ஜீவனாம்சமாக கேட்ட ஆர்த்தி ரவி

jayamravi
ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ரவி வழக்கு இன்று நீதிமன்றத்திற்கு வந்தது. அதனால் இருவரும் நீதிமன்றத்தில் வந்திருந்தனர். இது சம்பந்தமான வழக்கை மீண்டும் நீதிமன்றம் ஒத்தி வைத்திருக்கிறது. கிட்டத்தட்ட 16 வருடங்களாக தங்கள் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழித்துக் கொண்டிருந்த ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ரவி இப்போது விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியிருக்கின்றனர்.
ஆனால் ஜெயம் ரவிதான் ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என முதலில் நீதிமன்றத்தை நாடினார். இப்போது வரை எனக்கான நியாயம் வேண்டும் என ஆர்த்தி ரவி போராடிக் கொண்டுதான் வருகிறார். எங்கள் வாழ்க்கையில் எப்போது ஒரு மூன்றாவது நபர் உள்ளே நுழைந்தாரோ அப்போதே எங்கள் வாழ்க்கை இருட்டாகி விட்டது என்றும் ஆர்த்தி ரவி கூறினார்.
மேலும் வீட்டிலிருந்து அவர் வெறுங்காலோடு செல்லவில்லை. முன் கூட்டியே திட்டமிட்டே எல்லாம் செய்துதான் அவருக்கு தேவையான கார், விலையுயர்ந்த காலணிகள், ஆடைகள் எல்லாவற்றையும் எடுத்துவிட்டுத்தான் சென்றிருக்கிறார் என்றும் ஆர்த்திரவி கூறியிருக்கிறார். இன்னொரு பக்கம் ஆர்த்திரவியின் தாயாரும் அவருடைய நியாயத்தையும் கூறியிருக்கிறார்.
இதுவரை என்னுடைய மகனாகத்தான் பார்க்கிறேன். அவரும் என்னை அம்மா என்றேதான் அழைப்பார். இந்த அம்மாவின் கடைசி ஆசை அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழவேண்டும் என்பதுதான் என அவருடைய அறிக்கையில் பகிர்ந்திருந்தார். இப்படி ஆளாளுக்கு இரண்டு பக்க அறிக்கையை தொடர்ந்து பதிவிட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள்.
jayamravi
இதற்கிடையில் ஜெயம் ரவியிடம் இருந்து தனக்கு மாதம் 40 லட்சம் தொகை ஜீவனாம்சமாக வேண்டும் என ஆர்த்திரவி கேட்டிருக்கிறார். இதற்கு பதில் அளிக்க ஜெயம் ரவிக்கு ஜூன் 12 ஆம் தேதி வரை நேரம் கொடுத்திருக்கிறது நீதிமன்றம்.