சூடுபிடித்த ஜெயம் ரவி விவகாரம்: ஆர்த்தி விட்ட அறிக்கை... கப் சிப் ஆன கெனிஷா...!

ஜெயம் ரவி, ஆர்த்தி விவாகரத்து விவகாரம் தான் இப்போது எங்கு பார்த்தாலும் ஒரே பேச்சாக உள்ளது. மீடியாக்களை சொல்லவே வேணாம். இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். இதுல கெனிஷா தான் தனது வருங்கால துணைவின்னு ஜெயம் ரவி அறிவித்தார். அதில் இருந்து எரியுற நெருப்பில் எண்ணை ஊற்றியது போல பற்றி எரிகிறது பிரச்சனை.
பாப் பாடகியான கெனிஷா தான் எல்லாவற்றுக்கும் காரணம். அவருடன் உள்ள தொடர்பால் தான் மனைவியை பிரிகிறார் ஜெயம் ரவின்னு சொல்றாங்க. ஆனால் தாங்க முடியாத மன அழுத்தம், ஆர்த்தி மற்றும் மாமியாரின் டார்ச்சர் தான் காரணம் என்கிறார் ஜெயம் ரவி.
17 ஆண்டுகள் நல்லா தான் வாழ்க்கை போனது. இப்போ திடீர்னு பிரிய என்ன காரணம்னு பலரும் பேசுறாங்க. ஜெயம் ரவியைப் பொருத்தவரை டீசன்டானவர். ஸ்மார்ட்டானவர். அவர் மேல் தப்பு இருக்க வாய்ப்பு இல்லைன்னு விமர்சகர்கள் பலரும் சொல்றாங்க. அதே நேரம் ஜெயம் ரவியும் எனது குழந்தைகளைப் பார்க்க விடாமல் தடுக்கிறார்கள் என குற்றம் சாட்டினார்.
ஆர்த்தி ரவியும் பதிலுக்கு 4 பக்க அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதற்கிடையில் கெனிஷா தன்னைப் பற்றியும், ரவிமோகன் பற்றியும், அவருக்கு ஆறுதலாக வரும் பதிவுகள் பற்றியும் தனது வலைதள பக்கங்களில் பதிவிட்டு வந்தார். ஆர்த்தி ரவி நேற்று அறிக்கை வெளியிட்டதும் தனது பதிவுகள் அத்தனையையும் இன்ஸ்டாவில் டெலிட் செய்து விட்டார்.
இதுல என்ன பியூட்டி என்னன்னா ரவி மோகன் கெனிஷாவைப் பற்றி என் வாழ்வின் ஒளின்னு பதிவு செய்தார். அதற்கு ஆர்த்தி உங்கள் வாழ்வில் ஒளியைக் கொண்டு வந்தவரால் தான் எங்கள் வாழ்வில் இருள் வந்துவிட்டது என்று அறிக்கை விட்டு இருந்தார். ஆர்த்தியோட அறிக்கையால் தான் கெனிஷா கப்சிப் ஆகிவிட்டாரோ என்று தோன்றுகிறது.
இப்போது ஆர்த்தி வேறு ஜீவனாம்சத்தை அறிவித்து விட்டார். தனது கணவர் ரவி மோகன் விவாகரத்து கோரும் பட்சத்தில் மாதம் தனக்கு 40 லட்சம் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று கோரி தடாலடியாக அறிக்கை விட்டுள்ளார்.