மதம் வெறுப்பை உண்டாக்கும்!. டிராவல் பண்ணுங்க புரியும்!.. அஜித் பேசிய வீடியோ வைரல்!..

நடிகர் அஜித்குமார் பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

By :  Murugan
Update: 2024-10-05 10:43 GMT
அஜித் குமார்

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். அல்டிமேட் ஸ்டார், தல என அவரை ரசிகர்கள் அழைத்து வருகிறார்கள். 33 வருடங்களுக்கு முன்பு அமராவதி என்கிற திரைப்படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். துவக்கத்தில் சாக்லேட் பாயாக நடித்து வந்த அஜித் பெரும்பாலும் காதல் படங்களில் நடித்தார்.

அதன்பின் ஆக்‌ஷன் படங்களில் நடிக்க துவங்கி பில்லா, மங்காத்தா, தீனா போன்ற படங்கள் மூலம் மாஸ் ஹீரோவாகவும் மாறினார். விஜயை போலவே இவருக்கும் பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. தனது ரசிகர் மன்றங்களை கலைத்த பின்னரும் இவருக்கு ரசிகர்கள் குறையவில்லை.

விஜய்க்கு சரியான போட்டி நடிகராக பார்க்கப்படுகிறார் அஜித். ஒருபக்கம், சினிமாவில் நடிப்பதை விட பைக்கில் நீண்ட தூரம் பயணிப்பது என்பது அஜித்துக்கு மிகவும் பிடிக்கும். அதனால்தான், பைக்கில் உலகம் சுற்றிவர திட்டமிட்டு ஏற்கனவே சில நாடுகளில் பைக் ஓட்டினார்.


அவருடன் பைக் ஓட்டி செல்லும் நண்பர் கூட்டமும் அவருக்கு இருக்கிறது. ஏற்கனவே, பலமுறை இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகியிருக்கிறது. ஒருபக்கம், கார் ரேஸில் கலந்து கொள்ளும் ஆர்வமும் அஜித்துக்கு உண்டு. விரைவில் அப்படி ஒரு கார் பந்தயத்தில் கலந்துகொள்ளவிருக்கிறார். சமீபத்தில் அது தொடர்பான புகைப்படங்கள் வெளியானது.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு பைக்கில் உலகை சுற்றும்போது அஜித் பேசியுள்ள வீடியோ இப்போது வெளியாகியுள்ளது. மதமும் ஜாதியும் உங்களை நீங்கள் இதுவரை பார்க்காத மனிதர்களையும் வெறுக்க வைக்கும் என ஒரு கூற்று உண்டு. இது உண்மை. பயணத்தின் போது நான் வெவ்வேறு தேசம், வெவ்வேறு மத மக்களை சந்தித்தேன். அவர்களின் கலாச்சாரத்தை கற்றுக்கொண்டேன். அனைவரிடமும் நெருங்கி பழகினேன். ஒரு பயணம் சாதி, மத வேறுபாடுகளை உடைத்து அனைவரிடமும் நெருங்கி பழக வைக்க உதவுகிறது. நாடு, மதம், இனத்தை தாண்டி மக்களை நேசிக்க வைப்பது பயணங்கள்தான்’ என அஜித் அதில் பேசியிருக்கிறார்.

அனேகமாக ஒரு டாக்குமெண்டரி வீடியோ விரைவில் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில், அஜித்தின் பைக் பயணம் தொடர்பாக பல விஷயங்களையும் நாம் தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.

அஜித் கடந்த ஏப்ரல் மாதம் இதை பேசி ரெக்கார்ட் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.


Tags:    

Similar News