என் குழந்தைகளுக்கு நான் இதைதான் சொல்லிக் கொடுத்துருக்கேன்.. அஜித் சொல்றத கேளுங்க!..

by Ramya |
ajith
X

Actor Ajith: தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர் அஜித் அனைத்து இளைஞர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக இருந்து வருகின்றார். இவரது நடிப்பில் தற்போது 2 திரைப்படங்கள் வெளியிட்டிற்கு தயாராக இருக்கின்றது. விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி 2 திரைப்படங்களின் படப்பிடிப்பையும் ஒருசேர முடித்து இருக்கின்றார் நடிகர் அஜித்.

இந்த இரண்டு திரைப்படங்களுமே தற்போது வெளியிட்டு இருக்கு தயார் நிலையில் இருக்கின்றது. விடாமுயற்சி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில பிரச்சனைகள் காரணமாக படம் வெளியாகவில்லை. அதைத்தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்திருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வருகிற தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக இருக்கின்றது.


விடாமுயற்சி திரைப்படம் எப்போது வெளியாகும் என்பது தொடர்பான தகவல் இன்னும் வெளியாகவில்லை. விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இதற்கிடையில் இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்பை முடித்த கையோடு அஜித் துபாயில் நடைபெற்று வந்த கார் ரேசில் பங்கேற்பதற்காக சென்று விட்டார்.

நேற்றைய தினம் அவரது டீமானது ரேசில் 3வது இடத்தை பிடித்தது. இந்த வெற்றியை அவரின் நண்பர்கள் குடும்பத்தினர் அனைவரும் உற்சாகமாக சேர்ந்து கொண்டாடியிருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. துபாய் ரேஸ் நடக்கும் இடத்திற்குச் சென்ற அவரின் குடும்பத்தினர் நடிகர் அஜித்தின் டீமை உற்சாகப்படுத்தியதுடன் கொண்டாடி தீர்த்தார்கள்.

அவரது ரசிகர்களும் அஜித்காக அந்த ரேஸ் நடக்கும் இடத்திற்கு சென்று உற்சாகப்படுத்தி இருந்தார்கள். இதையடுத்து நடிகர் அஜித் ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி கொடுத்திருந்தார். அதில் ரசிகர்களுக்கு அன்பான பல வேண்டுகோள்களை முன் வைத்திருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது: 'நடிகர் அஜித் வாழ்க.. விஜய் வாழ்க என்று கூறும் நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள். உங்கள் அனைவரின் அன்புக்கும் நான் நன்றி உள்ளவனாக இருக்கின்றேன்.

ஆனால் ரசிகர்கள் உங்களின் வாழ்க்கையை பார்த்துக் கொள்ள வேண்டும். நான் மிகவும் மகிழ்ச்சியான மனிதன். அதே சமயம் எனது ரசிகர்களும் தங்களுடைய வாழ்க்கையில் சிறப்பாக இருக்க வேண்டும். என் குழந்தைகளுக்கு நான் கொடுக்கும் அட்வைஸ் இதுதான். பள்ளிகளில் அவர்கள் தங்களது கல்வியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.


அவர்களின் கம்யூனிகேஷன் திறமைகளை எப்போதும் சிறப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயமாக விளையாட்டிலும், டிராவல் செய்வதிலும் ஈடுபாடு காட்டுவதை அறிவுறுத்த வேண்டும். கல்வி மிகவும் முக்கியமானது. அதே சமயம் விளையாட்டு வாழ்க்கையில் மிக முக்கியம் என்பதை என் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து வளர்க்கின்றேன்' என்று நடிகர் அஜித் தனது பேட்டியில் பேசியிருக்கின்றார். நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக் கால்பந்தாட்டத்தில் அதிக ஈடுபாடு இருப்பவர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்.

Next Story