பாலா படுத்திய பாடு!.. சரக்கடிச்சி சமாளிச்ச விஷால்!.. அப்பவே உண்மையை சொன்ன ஆர்யா!...

by Murugan |
arya bala
X

Actor Vishal: மதகஜராஜா படம் தொடர்பான விழாவில் நடிகர் விஷாலை பார்த்த பலரும் ஆதிர்ச்சியடைந்தனர். ஏனெனில், மொட்டை அடித்தது போல் தலை முடி, வழித்த மீசை, மைக்கை கூட பிடிக்க முடியாமல் கை நடுக்கும், குரலில் இருந்த தடுமாற்றம் என விஷாலை இதற்கு முன் யாரும் இப்படி பார்த்தது இல்லை.

விஷால் உடல்நிலை: அவர் பேச முடியாமல் நிற்க ‘அவருக்கு வைரல் காய்ச்சல்’ என தொகுப்பாளினி டிடி மேடையிலேயே சொன்னார். அவரால் நிற்க முடியாது என்பதால் அங்கே சோபா போட்டு அமர வைத்தனர். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. ‘விஷாலுக்கு என்ன ஆச்சி.. எப்படி இருந்தவர்?’ என பதிவிட்டு பலரும் அந்த வீடியோவை தங்களின் சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்தனர்.


எனவே, ‘விஷாலின் உடம்புக்கு என்ன பிரச்சனை?’ என பலரின் மனதிலும் கேள்வி எழுந்தது. அவருக்கு வைரஸ் காய்ச்சலெல்லாம் இல்லை. அவன் இவன் படத்தில் நடித்தபோது அவரின் கண் பார்ப்பதற்கு ஒன்றைக் கண் போல தெரிய வேண்டும் என்பதற்காக கண்ணை இழுத்து வைத்து தைத்துவிட்டனர்.

குடிப்பழக்கம்: அதனால், அவருக்கு ஒற்றைத் தலைவலி ஏற்பட்டது. அதை சமாளிக்க முடியாமல் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். அது அவரின் உடல்நிலையை பாதித்துவிட்டது என்று சினிமா பத்திரிக்கையாளர்கள் சொன்னார்கள். கடந்த 2 நாட்களாக இந்த செய்திதான் சமூகவலைத்தளங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.


நடிகர் ஆர்யா: இந்நிலையில், அந்த செய்தி உண்மைதான் என நிரூபிக்கும் வகையில் ‘அவன் இவன்’ படத்தில் விஷாலுடன் நடித்த ஆர்யா அந்த பட விழாவில் பேசிய வீடியோ இப்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் பேசும் ஆர்யா ‘விஷால் நடிக்கும்போது கண்ணை ‘இந்த பக்கம் இப்படி திருப்பு.. அப்படி திருப்பு’ என்பார் பாலா. என்னிடம் ‘நான் ஏதோ உண்மையான ஒன்றைக்கண் போல இதை பாலா செய்ய சொல்கிறார்’ என கேட்பான் விஷால்.

மேலும், இரவு ரூமில் கண் வலி மற்றும் தலைவலியால் அவதிப்படுவான். ‘ஒரு ஆப் அடித்துவிட்டு தூங்கு’ என சொல்லுவேன். ஒரு வருடத்தை இப்படியே ஓட்டிவிட்டான். இப்போது கட்டிங் அடிக்காமல் தூங்க முடியவில்லை’ என ஜாலியாக சிரித்துக்கொண்டே சொன்னார். ஆர்யா சொல்வதை பார்க்கும் போது விஷால் இப்படி ஆனதுக்கு பாலாவும் ஒரு காரணம் என்றே தோன்றுகிறது.

Next Story