என்னை பத்தி தப்பா பேசி காலி பண்ண நினைச்சா!.. காலரை தூக்கிவிட்ட தனுஷ்!....

By :  MURUGAN
Published On 2025-06-02 11:44 IST   |   Updated On 2025-06-02 11:44:00 IST

Dhanush: துள்ளுவதோ இளமை படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் தனுஷ். அண்ணன் செல்வராகனிடம் நடிப்பை கற்றுக்கொண்டவர். அவர் இயக்கத்தில் தனுஷ் நடித்த காதல் கொண்டேன், புதுப்பேட்டை போன்ற படங்கள் ரசிகர்களின் ஃபேவரைட்டாக இருக்கிறது. அதன்பின் பல இயக்குனர்களின் படங்களிலும் நடித்து தன்னை மெருகேற்றிகொண்டார்.

கமர்ஷியல் மசாலா படங்களில் நடித்தாலும் இடையிடையே நல்ல கதையம்சம் கொண்ட நடிப்புக்கு தீனி போடும் படங்களிலும் நடிக்கும் நடிக்கும் நடிகர் தனுஷ். அப்படி இவர் நடித்த ஆடுகளம், வட சென்னை, கர்ணன், அசுரன், மரியான் போன்ற படங்கள் தமிழ் சினிமாவின் முக்கிய படங்களாக இருக்கிறது. இதுவரை 2 தேசிய விருதுகளையும் தனுஷ் வாங்கியிருக்கிறார்.

தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் தனுஷ் நடித்து வருகிறார். அப்படி தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்கிற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் தனுஷ் தன்னை பற்றி பரப்பப்படும் வதந்திகள் பற்றி பேசியிருக்கிறார்.


எவ்ளோ வதந்தி வேணும்னாலும் பரப்புங்க. என்ன நெகட்டிவிட்டி வேணாலும் பரப்புங்க. ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆகும் ஒன்றரை மாசம் முன்பு என்னை பற்றி நெகட்டிவிட்டி பரப்புங்க. தம்பிகளா கொஞ்சம் தள்ளிப்போய் விளையாடுங்க ராஜா. இங்க இருக்கிறவங்க என் ரசிகர்கள் கிடையாது. 23 வருஷமா என் கூடவே இருக்கும் கம்பேனியன்ஸ். நீங்க சும்மா நாலு வதந்தியை பரப்பி என்னை காலி பண்ணிடனும்னு நினைச்சா அதைவிட முட்டாள்தனம் எதுவும் கிடையாது. ஒரு செங்கலை கூட ஆட்ட முடியாது’ என பொங்கியிருக்கிறார்.

திரையுலகில் எந்த இளம் நடிகர், நடிகைகள் விவாகரத்து பெற்றாலும் இதற்கு பின்னணியில் தனுஷ் இருப்பதாக செய்திகள் கிளம்பும். ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிந்ததற்கு கூட காரணம் தனுஷ் என பாடகி சுசீத்ரா பகீர் புகார் கூறினார். இந்நிலையில்தான் குபேரா பட விழாவில் பொங்கியிருக்கிறார் தனுஷ்.

Tags:    

Similar News