இளையராஜா இல்லனா என்ன!.. அந்த நடிகரின் பயோபிக்கில் நடிக்கும் தனுஷ்!...
Dhanush: துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் தனுஷ். அதன்பின் காதல் கொண்டேன், புதுப்பேட்டை என நடிப்பில் வித்தியாசம் காட்டி நடித்தார். கமர்சியல் மற்றும் கலை சினிமா என மாறி மாறி பயணித்து வரும் நடிகர் இவர். இவருக்கென தனி ரசிகர் கூட்டமும் உண்டு.
தான் ஒரு திறமையான நடிகர் என பல திரைப்படங்களில் இவர் நிரூபித்திருக்கிறார். அசுரன், ஆடுகளம் படங்கள் மூலம் தேசிய விருதும் வாங்கியிருக்கிறார். சினிமாவில் பிரபலமான ஒருவரின் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்து வருவது என்பது காலம் காலமாக நடந்து வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு இசைஞானி இளையராஜாவின் பயோகிராபியில் தனுஷ் நடிப்பதாக செய்திகள் வெளியானது. இளையராஜாவாக தனுஷ் நடித்தால் செட் ஆகுமா என்கிற சந்தேகம் பலருக்கும் எழுந்தது. ஆனால், போஸ்டர்களை பார்த்தபோது தனுஷ் பொருத்தமாகவே இருந்தார்.
அதேநேரம், இந்த படத்தை ராக்கி, சாணி காயிதம், கேப்டன் மில்லர் போன்ற ரத்தம் தெறிக்கும் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கப்போகிறார் என செய்தி வெளியானதும் எல்லோருக்கும் தூக்கி வாரிப்போட்டது. ‘கசாப்பு கடைக்காரன் கையில் கடவுளின் படம்’ என இளையராஜாவின் தீவிர ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர்.
ஆனால், அவர்கள் இதை கண்டுகொள்ளவில்லை. கமல்ஹாசன் வந்து துவங்கி வைக்க பூஜையும் போடப்பட்டது. அதன்பின் இளையராஜாவை அவ்வப்போது சந்தித்து தனது வாழ்வில் நடந்த முக்கிய சம்பவங்கள் பற்றி அவர் சொன்ன தகவல்களை சேகரித்து வந்தார் அருண் மாதேஸ்வரன்.
ஆனால், இப்போது வரை இந்த படம் டேக் ஆப் ஆகவில்லை. தனுஷும் மற்ற படங்களை புக் செய்து கொண்டே போகிறார். இந்நிலையில்தான் இந்த படம் டிராப் ஆகிவிட்டதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது மறைந்த நடிகர் சந்திரபாபுவின் பயோகிராபியில் தனுஷ் நடிக்கவுள்ளார் என்கிற செய்தி வெளியே கசிந்திருக்கிறது. இதற்காக சந்திரபாபுவின் வாரிசுவிடம் பேசி கதையின் உரிமைக்காக 3 கோடி கொடுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. தனுஷ் பல படங்களில் பிசியாக இருப்பதால் இந்த படம் எப்போது துவங்கும் என்பது தெரியவில்லை.