அந்த பிரபலத்தால் செம அப்செட்டில் இருக்கும் தனுஷ்!.. ஒரு வார்த்தை கூட கேட்கலையாமே?..

by Ramya |
vetrimaran
X

நடிகர் தனுஷ்: தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து திரைப்படங்களை கையில் வைத்துக்கொண்டு படு பிஸியாக நடித்து வருகின்றார் நடிகர் தனுஷ். தற்போது மட்டும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் கிட்டத்தட்ட ஒரு டஜன் திரைப்படங்களை கையில் வைத்திருக்கின்றார். தன்னுடைய இயக்கம் மட்டும் இல்லாமல் மற்ற இயக்குனர்களின் திரைப்படங்களிலும் தொடர்ந்து கவனம் செலுத்து நடித்து வருகின்றார்.

அந்த வகையில் நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் என்கின்ற திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கின்றார். அடுத்ததாக இட்லி கடை என்கின்ற திரைப்படத்தை தானே இயக்கி நடித்து வருகின்றார். இந்த திரைப்படம் ஏப்ரல் 10ம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாக இருக்கின்றது. மேலும் தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் குபேரா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார்.


இந்த திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகும் என கூறி வருகிறார்கள். இதற்கு அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கின்றார். இட்லி கடை திரைப்படத்தை முடித்த பிறகு தனுஷ் 55 திரைப்படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் ஹிந்தியில் ஒரு திரைப்படத்திலும் நடிக்க இருக்கின்றார். இதற்கிடையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இளையராஜாவின் பயோபிக் திரைப்படமும் பெண்டிங்கில் இருக்கின்றது. இப்படி தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த இயக்குனர்கள் அவரை இயக்குவதற்கு வரிசை கட்டி காத்திருக்கிறார்கள்.

இதற்கிடையில் பண்டிகையை முன்னிட்டு புதிய அறிவுக்கு ஒன்றும் வெளியாகியிருக்கின்றது. அதாவது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். இந்த திரைப்படத்தை விடுதலை திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் எல்டர் குமார் தயாரிக்க இருக்கின்றார். இப்படம் கேஜிஎஃப் கதையை மையமாக வைத்து எடுக்க இருப்பதாக தகவல் வெளியாக இருக்கின்றது.

நடிகர் தனுஷ் ஏற்கனவே ஏகப்பட்ட திரைப்படங்களை தனது கையில் வைத்திருக்கும் நிலையில் இப்படி ஒரு அறிவிப்பு வெளியாகும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் நடிகர் தனுஷை இப்படி ஒரு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கவில்லை. அதாவது நடிகர் தனுஷின் அனுமதி இல்லாமலேயே இப்படி ஒரு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றதாம்.

அதாவது கடந்த சில தினங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் எல்டர் குமார் தனுஷிடம் நாம் இணைந்து ஒரு திரைப்படம் செய்யலாம் என்று கூறியிருக்கின்றார். அதற்கு தனுஷும் சரியென சொல்லி இருக்கின்றார். அதை மனதில் வைத்துக் கொண்டு தற்போது அவரிடம் கேட்காமல் இல்லையே இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றாராம்.


ஏற்கனவே வெற்றிமாறனை வைத்து விடுதலை மற்றும் விடுதலை 2 இரண்டு பாகங்களை எடுத்த நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி விடலாம் என முடிவெடுத்து அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றாராம். இந்த செய்தியை கேட்ட தனுஷ் மிகப்பெரிய அப்செட்டில் இருந்து வருகின்றார். தன்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்காமல் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டது எப்படி சரியாக இருக்கும் என்று கோபத்தில் இருக்கின்றார்.

ஆனால் அதை வெளியில் சொல்ல முடியாது. ஏனென்றால் நடிகர் தனுஷ் இது தொடர்பாக ஏதாவது கேள்வி கேட்டால் அது வெற்றிமாறனை அவமதிப்பது போல் இருக்கும் என்பதால் அமைதியாக இருந்து வருகின்றார். அது மட்டுமில்லாமல் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிப்பதற்கு தனுஷ் எப்போதும் மறுப்பு தெரிவிக்க மாட்டார் என்ற நம்பிக்கையில் தயாரிப்பாளர் இதுபோன்ற ஒரு வேலையை செய்திருப்பதாக சினிமா விமர்சகர்கள் கூறி இருக்கிறார்கள்.

Next Story