குபேரா ரிலீஸ் என்ன இவ்வளோ தள்ளி போயிடுச்சு!.. ஆனாலும் செம குஷியில் இருக்கும் தனுஷ்..

by Ramya |
kubera
X

kubera

நடிகர் தனுஷ்: தமிழ் சினிமாவில் தன்னைச் சுற்றி எவ்வளவு தான் சர்ச்சைகள் இருந்தாலும் அதையெல்லாம் சற்றும் காதில் வாங்கிக் கொள்ளாமல் அடுத்தடுத்த படங்கள் என்று பிஸியாக நடித்து வருகின்றார் நடிகர் தனுஷ். சொல்லபோனால் இவரை நோக்கி வரும் சர்ச்சைகளுக்கு பதில் சொல்வதற்கு கூட இவருக்கு நேரமில்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு தன்னுடைய இயக்கத்தில் உருவாகும் படங்களிலும், மற்ற இயக்குனர்களின் படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகின்றார்.

ராயன் திரைப்படம்: பவர் பாண்டி திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் தன்னுடைய 50-வது திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருந்தார் நடிகர் தனுஷ். இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. 100 கோடிக்கு மேல் படம் வசூல் செய்து சாதனை படைத்தது. இதனால் தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களை இயக்குவது என்று முடிவெடுத்தார் நடிகர் தனுஷ்.


தன்னுடைய இயக்கம்: ராயன் திரைப்படத்தை முடித்த கையோடு இளம் நடிகர்களை வைத்து நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்டது. படத்தின் பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது. இப்படம் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறி வருகிறார்கள்.

அதனை தொடர்ந்து இட்லி கடை என்கின்ற திரைப்படத்தையும் இயக்கி வருகின்றார் தனுஷ். இப்படத்தின் படப்பிடிப்பும் ஏறத்தாழ முடிவடைந்துவிட்டது. இன்னும் சிறிது காட்சிகள் மட்டுமே எடுக்கப்படவுள்ளது. இந்த திரைப்படம் தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகும் என்று கூறியிருக்கிறார்கள்.

குபேரா திரைப்படம்: ராயன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதே நடிகர் தனுஷ் தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் குபேரா என்கின்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி விட்டார். இப்படத்தில் நாகார்ஜுனா, ராஸ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.


நடிகர் தனுஷ் இதுவரை நடித்துராத ஒரு புது விதமான கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்திருக்கின்றார். இந்தப் படத்தின் படப்பிடிப்பும் ஏறத்தாழ முடிவடைந்து இருக்கின்றது. இந்த திரைப்படம் முதலில் ஜனவரி மாதம் வெளியாகும் என்று கூறி வந்த நிலையில் தற்போது நடிகர் தனுஷின் அடுத்தடுத்த திரைப்படங்கள் வெளிவர இருப்பதால் ஜூன் 20 ஆம் தேதிக்கு படத்தை ரிலீஸ் செய்வதற்கு படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

படம் முழுவதும் எடுக்கப்பட்டதற்காக பிறகு இவ்வளவு தள்ளி ஏன் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று தனுஷ் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க படம் முழுவதையும் பார்த்த தனுஷ் மிரண்டு போய் இருக்கின்றாராம். படத்தின் காட்சிகள் அனைத்தும் மிகப் பிரமாதமாக வந்திருப்பதால் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த ஆண்டு தனுசுக்கு அடுத்தடுத்த படங்கள் வெளியாகி சிறந்த ஆண்டாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Next Story