2 படங்கள் ஹிட்டு கொடுத்தும் இப்படி ஆகிப்போச்சே!.. ஹரீஸ் கல்யாண் நிலமை ஐயோ பாவம்..

by Murugan |
harish
X

சிந்து சமவெளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ஹரிஸ் கல்யாண். அதன்பின் தொடர்ந்து சில படங்களில் நடித்தாலும் அவை கை கொடுக்கவில்லை. எனவே பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சிக்கு பின் பியார் பிரேமா காதல் படம் இவருக்கு கை கொடுத்தது. அதன்பின் வெளிவந்த தனுசு ராசி நேயர்களே படமும் ஓடியது.

இந்த 2 படங்களிலுமே பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஹரீஸ் கல்யாணுடன் கலந்துகொண்ட ரைசா வில்சன் ஜோடியாக நடித்திருந்தார். இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஓ மணப்பெண்ணே, கசட தபற, தாராள பிரபு உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அதில் தாராள பிரபு இவருக்கு கை கொடுத்தது.


சமீபகாலமாகவே நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அப்படி அவர் நடித்து வெளியான பார்க்கிங், லப்பர் பந்து போன்ற படங்கள் பாரட்டை பெற்றதோடு நல்ல வசூலையும் பெற்றது. பார்க்கிங் பட இயக்குனர் சிம்பு வாய்ப்பு கொடுத்தார். லப்பர் பந்து படத்தை ஹிந்தியில் உருவாக்க ஆசைப்படுவதாக ஷாருக்கான் சொன்னார். இப்படிப்பட்ட 2 படங்களை கொடுத்த ஹரீஸ் கல்யாணின் அடுத்த படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுருக்கிறது.



டீசல் என்கிற படத்தில் ஒரு வருடத்திற்கும் மேலாக ஹரீஸ் கல்யாண் நடித்து வருகிறார். அதிக பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் எப்போது முடியும் என்றே தெரியவில்லை. தாசமக்கான் என்கிற படம் முடிந்தும் ஒடிடி உரிமை விற்காததால் வியாபாரம் ஆகவில்லை. அடுத்து சசி இயக்கத்தில் நடித்துள்ள நூறு கோடி வானவில் படத்தின் தயாரிப்பாளர் ஐ.டி ரெய்டில் சிக்கி அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார். இப்படி ஹரீஸ் கல்யாண் நடித்துள்ள 3 படங்களும் முடங்கிக் கிடக்கிறது.

மொத்தத்தில் லப்பர் பந்து, பார்க்கிங் என 2 சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தும் அடுத்த படங்களின் வெற்றியை அறுவடை செய்யமுடியாமல் ஹரீஸ் கல்யாண் தவித்து வருகிறார்.

Next Story