பேக் அடிச்ச விடாமுயற்சி!.. பொங்கல் ரேசில் இறங்கிய ஜெயம் ரவி.. 10 நாள்ல எப்படிங்க?..
விடாமுயற்சி: இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் அஜித் நடிப்பில் கடந்த இரண்டு வருடங்களாக எடுக்கப்பட்டு வரும் திரைப்படம் விடாமுயற்சி. துணிவு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித் கமிட்டான இந்த திரைப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. படம் இந்தா அந்தா என்று எடுத்து முடிப்பதற்கே இரண்டு வருடம் ஆகிவிட்டார் இயக்குனர் மகிழ் திருமேனி.
பொங்கல் ரிலீஸ்: இதற்கிடையில் நடிகர் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்திரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருந்தார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டது. இப்படம் தான் முதலில் பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் பின்னர் நாங்கள் தான் பொங்கலுக்கு வருவோம் என்று கூறிக்கொண்டு வந்தது விடாமுயற்சி திரைப்படம். இதனால் வேறு வழி இல்லாமல் பின்வாங்கினார் ஆதிக் ரவிச்சந்திரன்.
விலகிய விடாமுயற்சி: எப்படியும் இந்த ஆண்டு பொங்கலுக்கு விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ் ஆகி விடும் என்கின்ற நம்பிக்கையில் ரசிகர்கள் இருந்து வந்தார்கள். அதற்கு ஏற்ற வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விடாமுயற்சி படத்தின் டீசர் மற்றும் முதல் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
நிச்சயம் படம் பொங்கலுக்கு ரிலீஸ் என்று நம்பிக்கொண்டிருந்த நிலையில் நேற்று லைக்கா நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களிடையே மிகப்பெரிய குண்டை தூக்கிப்போட்டு இருக்கின்றது. அதாவது சில தவிர்க்க முடியாத காரணங்களால் பொங்கல் பண்டிகைக்கு விடாமுயற்சி வரப்போவதில்லை என்று அறிக்கை வெளியிட்டிருந்தது. இது அஜித் ரசிகர்களிடையே மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இதனால் கடும் கோபத்தில் இருந்து வருகிறார்கள் அஜித் ரசிகர்கள்.
பொங்கலுக்கு ரிலீசாகும் படங்கள்: விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் ரேசிலிருந்து விலகிய நிலையில் இந்த வருடம் பொங்கலுக்கு பாலா இயக்கத்தில் உருவாகி இருக்கும் வணங்கான் திரைப்படமும், சங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கேம் சேஞ்சர் திரைப்படமும் வெளியாக இருக்கின்றது. கேம் சேஞ்சர் திரைப்படம் தெலுங்கு படமாக கருதப்பட்டு வருகின்றது. இதனால் பொங்கல் பண்டிகைக்கு சோலோவாக களமிறங்குகின்றது வணங்கான் திரைப்படம்.
விடாமுயற்சி திரைப்படம் வர இருந்ததால் நடிகர் விக்ரமின் வீரதீரசூரன் திரைப்படம் வரலாமா வேண்டாமா என்கிற யோசனையில் இருந்தது. தற்போது விடாமுயற்சி திரைப்படம் விலகிய காரணத்தால் வீர தீர சூரன் படம் வருவதற்கு வாய்ப்பு இருக்கின்றது என்று கூறி வருகிறார்கள். இதற்கிடையில் யாரும் எதிர்பார்க்காத மற்றொரு திரைப்படம் பொங்கல் ரேசில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் நடிகர் ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் காதலிக்க நேரமில்லை. இந்த திரைப்படம் தற்போது பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருப்பதாக கூறப்படுகின்றது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பிருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசி வருகிறார்கள்.