இனிமே எல்லாம் இப்படித்தான்!. கமல் எடுத்த முக்கிய முடிவு!.. ரொம்ப ரிஸ்க் ஆச்சே!...
Kamalhaasan: கமல் நடிகர் மட்டுமல்ல. தயாரிப்பாளர், இயக்குனர் என அவருக்கு பல முகங்கள் உண்டு. அவரின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பல படங்களை தயாரித்திருக்கிறது. முதன் முதலில் கமலின் 100வது படமான ராஜபார்வை படத்தை இந்நிறுவனம் தயாரித்தது. அதன்பின் இப்போது வரை எவ்வளவோ படங்கள். இதில் 90 சதவீத படங்களில் கமல் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
அபூர்வ சகோதரர்கள். மைக்கேல் மதன காமராஜன், தேவர் மகன், விருமாண்டி, ஹேராம், விஸ்வரூபம், விக்ரம் என பல படங்களையும் இந்நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த நிறுவனம் தயாரித்ததிலேயே லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படம்தான் அதிக வசூலை பெற்றது. இப்படம் 400 கோடி வசூலை அள்ளியது.
அதேநேரம், லைக்கா தயாரிப்பில் கமல் நடித்து வெளியான இந்தியன் 2 படம் ஓடவில்லை. எனவே, இந்தியன் 3-யிலேயே கமல் ஆர்வம் காட்டவில்லை. அதன்பின் ராஜ்கமல் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கிய தக் லைப் பாடத்தில் கமல் நடித்தார். இந்த படத்திற்கு பெரிய அளவில் புரமோஷன் செய்யப்பட்டது. கமலும் பல ஊர்களுக்கும் சென்று புரமோஷன் செய்தார்.
இப்படம் பற்றி மணிரத்னமும், கமலும் பல ஊடகங்களுக்கும் பேட்டி கொடுத்தனர். எனவே, படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், படம் வெளியானபோது நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது. சமூகவலைத்தளங்களில் பலரும் படத்தை ட்ரோல் செய்தார்கள். எனவே, இது படத்தின் வெற்றியை கடுமையாக பாதித்தது. கமல் அடுத்து அன்பு - அறிவு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இதையும் ராஜ்கமல் நிறுவனமே தயாரிக்கிறது.
இந்நிலையில், இனிமேல் ராஜ்கமல் தயாரிக்கும் படத்தில் மட்டுமே நடிப்பது என முடிவெடுத்திருக்கிறாராம். அதாவது மற்ற தயாரிப்பாளர்களின் தயாரிப்பில் நடிக்க வேண்டாம் என முடிவெடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. லைக்கா நிறுவனத்தில் நடித்த இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 போன்ற படங்களில் அவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களே இதற்கு காரணம் என்கிறார்கள்.
மற்ற தயாரிப்பாளர் என்றால் சம்பளத்தை வாங்கிக்கொண்டு நடிப்பதோடு வேலை முடிந்துவிட்டது. படம் ஓடவில்லை என்றாலும் நஷ்டத்திற்கும் கமலுக்கும் சம்பந்தமில்லை. ஆனால், சொந்த தயாரிப்பு என்றால் நஷ்டம் கமலுக்கு மட்டுமே. அதேநேரம், லாபம் என்றால் எல்லாம் கமலுக்கே. கமல் முடிவு சரியா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.