பெரிய நடிகரை இயக்கும் மணிகண்டன்!.... அவரோட பல வருஷ கனவு நிஜமாயிடுச்சே!..

by Murugan |
manikandan
X

Actor Manikandan: சினிமாவுக்கு வரும் எல்லோருக்கும் ஒரு கனவும், லட்சியமும் இருக்கிறது. ஆனால், எல்லோருக்கும் அது நடக்கும் என சொல்ல முடியாது. திறமை, உழைப்பு, வாய்ப்பு, விடாமுயற்சி, தொடர்புகள் என எல்லாம் அதில் கூடி வரவேண்டும். சிலருக்கு அது நடக்கும். பலருக்கும் அது நடக்காது.

கனவோடு வந்து சினிமாவில் சாதிக்க முடியாமல் காணாமல் போனவர்கள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். இன்னமும் புதிது புதிதாக வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ரசிகர்களுக்கு வெற்றி பெற்றவர்களை மட்டுமே தெரியும். தோல்வி அடைந்து போனவர்கள் பலரும் இருக்கிறார்கள்.


மணிகண்டன்: சினிமாவுக்கு அப்படி ஒரு கனவோடு வந்தவர்தான் மணிகண்டன். துவக்கத்தில் நண்பர்களோடு இணைந்து யுடியுப் சேனல் நடத்தி வந்தார். இயக்குனர் ரஞ்சித் அறிமுகம் கிடைத்து அவரின் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிப்பார். ரஞ்சித் இயக்கிய காலா படத்தில் ரஜினியின் மகன்களில் ஒருவராக நடித்திருந்தார். சில படங்களில் உதவி இயக்குனராகவும் வேலை செய்திருக்கிறார்.

விக்ரம் வேதா: விஜய் சேதுபதிக்கு மிகவும் நெருக்கமானவர் இவர். அவரின் காதலும் கடந்து போகும் படத்திலும் ஒரு காட்சியில் நடித்திருப்பார். மேலும், விஜய் சேதுபதி நடித்த விக்ரம் வேதா படத்திற்கு வசனம் எழுதியவர் மணிகண்டன்தான். இந்த படம் மட்டுமில்லை. பீஸா 2, விஸ்வாசம், தம்பி, சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற படங்களுக்கும் இவர் வசனம் எழுதியிருக்கிறார். ஜெய் பீம் படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் பரிதாபத்தை சம்பாதித்தார்.


குடும்பஸ்தன்: பல படங்களில் நடித்திருந்தாலும் சமீபகாலமாக ஹீரோவாக நடிக்க துவங்கிவிட்டார். அப்படி அவர் நடித்து வெளியான குட் நைட் படம் நல்ல படம் என்கிற விமர்சனத்தை பெற்றதோடு நல்ல வசூலையும் பெற்றது. அதேபோல் லவ்வர் படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இவர் ஹீரோவாக நடித்துள்ள குடும்பஸ்தன் திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. ஒருபக்கம், நிறைய படங்களில் மணிகண்டன் டப்பிங்கும் பேசியிருக்கிறார். பல நடிகர்களை போல அற்புதமாக பேசுவார்.

மணிகண்டனுக்கு இயக்குனராக வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. ஏற்கனவே நரை எழுதும் சுயசரிதம் என்கிற படத்தை இயக்கினார். இந்த படம் சர்வதேச அளவில் விருதுகளை குவித்தது. தற்போது மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். சமீபத்தில் விஜய் சேதுபதியை சந்தித்து ஒரு கதையை சொல்லி அவரிடம் சம்மதம் வாங்கியிருக்கிறார். எனவே, விரைவிலோ அல்லது சில மாதங்கள் கழித்தோ மணிகண்டனின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியானாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.

Next Story