மற்றவர்களை ஏற்றிவிட்டு அழகு பாப்பாரு!.. ஒல்லி நடிகரை குறித்து உயர்வாக பேசிய ரோபோ!..
மற்றவர்களை ஏற்றிவிட்டு அழகு பார்க்கும் ஒரு ஏணி நடிகர் தனுஷ் என்று ரோபோ சங்கர் உயர்வாக பேசி இருக்கின்றார்.
நடிகர் தனுஷ்: தமிழ் சினிமாவில் தற்போது மிக பிஸியான நடிகராக இருந்து வருகின்றார் நடிகர் தனுஷ். தன்னை சுற்றி பல விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தனது வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றார். சமீபத்தில் கூட நடிகை நயன்தாரா தனுஷ் மீது காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதன் காரணமாக தனுஷ் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் தனுஷ் நயன்தாராவின் அறிக்கைக்கு எந்த பதிலும் கொடுக்கவில்லை. அதற்கு பதிலாக நீதிமன்றத்தில் காப்பி ரைட்ஸ் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் நயன்தாரா தரப்பில் இருந்து பதிலளிக்க உத்தரவிட்டிருக்கின்றது.
தொடர்ந்து இந்த பிரச்சனை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. சமூக வலைதள பக்கங்களில் நயன்தாராவின் ரசிகர்கள் தனுஷையும், தனுஷ் ரசிகர்கள் நயன்தாராவையும் மாறி மாறி விமர்சித்து வருகிறார்கள். தற்போது சினிமாவில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று நடிகர் தனுஷ் பட வேலைகளில் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றார்.
ராயன் திரைப்படத்தை தொடர்ந்து நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் என்கின்ற திரைப்படத்தை இயக்கி முடித்து இருக்கின்றார். அதற்கு அடுத்ததாக இட்லி கடை என்கின்ற திரைப்படத்தையும் இயக்கி வருகின்றார். இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக உள்ளது. அதற்கு அடுத்ததாக அமரன் திரைப்படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கும் நடிகர் தனுஷ் கமிட்டாகி இருக்கின்றார்.
இப்படி சினிமாவில் பிஸியாக இருக்கும் நடிகர் தனுஷ் தன்னைச் சுற்றி வலம் வரும் எந்த சர்ச்சைகளுக்கும் பதில் அளிக்காமல் இருந்து வருகின்றார். இந்நிலையில் தனுஷ் குறித்து பிரபல நடிகர் ரோபோ சங்கர் உயர்வாக பேசியிருக்கின்றார். தனுசுடன் இணைந்து இவர் மாரி என்கின்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். அந்த திரைப்படம் ரோபோ சங்கருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார் ரோபோ சங்கர்.
மாரி திரைப்படத்தில் தனுஷ் உடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்திருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது: 'மாரி திரைப்படத்தில் தனுஷ் உடன் நடித்ததை என்னால் மறக்கவே முடியாது. அவர் மற்றவர்களை ஏற்றிவிட்டு அழகு பார்க்கும் ஒரு ஏணி. என்னுடன் அவர் பழகும் போது ஒரு குழந்தையாகவே மாறிவிடுவார். ஒரு நடிகர் என்பதையும் தாண்டி ஒரு மிகப்பெரிய உயரத்தில் இருக்கின்றார். என் வாழ்க்கையில் தனுசை ஒருபோதும் மறக்கவே முடியாது' என்று மிகவும் நெகிழ்ச்சியாக கூறி இருந்தார். இந்த பேட்டி சமூக வலைதள பக்கங்களில் தற்போது வைரலாகி வருகின்றது.