செட்டுக்கு வந்ததே பெருசு.. சிம்ரனை இந்தளவு யாரும் சொல்லியிருக்க மாட்டாங்க.. நெகிழ்ச்சியில் சசிகுமார்

By :  ROHINI
Published On 2025-05-13 20:26 IST   |   Updated On 2025-05-13 20:26:00 IST

simran

 Simran: சமீபத்தில் சசிகுமார் சிம்ரன் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்தப் படத்தில் ஈழ அகதிகளாக சசிகுமாரும் சிம்ரனும் நடித்திருப்பார்கள். 90கள் காலகட்டத்தில் கனவுக்கன்னியாக பார்க்கப்பட்டவர் சிம்ரன். ரஜினி, கமல், அஜித் ,விஜய், சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து அவருக்கென ஒரு தனி முத்திரையை பதித்தவர்.

இந்தப் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். படம் பாசிட்டிவான விமர்சனத்தையே பெற்று வந்தது. இந்த நிலையில் படத்தின் வெற்றி விழா இன்று சென்னையில் நடைபெற்றது. அப்போது சசிகுமார் மேடையில் சிம்ரனை மிகவும் புகழ்ந்து பல விஷயங்களை பேசினார். இதோ அவர் கூறியது.

சிம்ரன் மேடம் ரொம்ப சந்தோஷம்.உங்க படங்கள் எல்லாம் அவ்ளோ ரசிச்சு பார்த்தோம். சிம்ரம் மேம் வரலையா வரலையானு கேட்டுக்கிட்டே இருந்தாங்க. அடுத்த வெற்றி விழாவுக்கு அழைச்சுட்டு வர்றேனு சொன்னேன். அப்படியே அவங்கள அழைச்சுட்டு வந்துட்டேன். சாரி.. அவங்களேதான் வந்தாங்க.அவங்களோட வொர்க் பண்ணுனது ரொம்ப சந்தோஷம்.

வந்தது பெண்ணா? வானவில்தானா? பூமியிலே பூப்பறிக்கும் தேவைதானா என தியேட்டரில் பார்த்திருப்போம். துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் அவ்ளோ ரசிச்சு பார்த்திருப்போம். அவங்க நம்ம செட்டுக்கு வந்ததே பார்க்கும் போது எப்படி இருக்கும் பாருங்க. அந்த சீனியாரிட்டி எதையும் பார்க்காமல் சிம்பிளாக இருக்கக் கூடிய நடிகை. அவங்க பெர்ஃபார்மன்ஸ பார்க்கும் போது பிரமிப்பா இருக்கு.

sasikumar

வாலி, பஞ்சதந்திரம் போன்ற படங்களில் பெர்ஃபார்மன்ஸ் பின்னியிருப்பாங்க. அவங்கள நாங்க பத்திரமா பார்த்துக்கணும்னு எண்ணம்தான் இருந்துச்சு. அவங்களோட உழைப்புக்கு மரியாதை கொடுக்கணும். நம்ம தமிழ் நாட்டில் வந்து நம்ம தமிழை கத்துக்கிட்டு இவ்ளோ படங்கள் பண்ணியிருக்காங்க. அப்படிப்பட்டவங்களுக்கு எவ்ளோ மரியாதை கொடுக்கணும்ங்கிற எண்ணம் தான் இருந்துச்சு. அதை எல்லாருமே நாங்க கொடுத்திருக்கிறோம். உங்கள ராணி போல பார்த்துக்குறோம் என்ற நம்பிக்கை இருக்கு. அத நீங்கதான் சொல்லணும் என சசிகுமார் கூறினார். 

Tags:    

Similar News