லப்பர் பந்து படத்தை மிஸ் பண்ண எஸ்.ஜே.சூர்யா!.. நடிப்பு அரக்கன் பண்ண தப்பு இதுதான்...

SJ Suriya: வாலி, குஷி என இரண்டு பெரிய படங்களை இயக்கிவிட்டு தான் இயக்கும் படங்களில் தானே ஹீரோவாக நடிக்க துவங்கியவர் எஸ்.ஜே.சூர்யா. ஒருகட்டத்தில் ஒரு ஒர்க் அவுட் ஆகாமல் போக மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்க துவங்கினார். ஹீரோ வாய்ப்பு இல்லாமல் போகவே விஜய் போன்ற பெரிய நடிகர்களின் படங்களில் வில்லனாக நடிக்க துவங்கினார்.

அது நன்றாகவே ஒர்க் அவுட் ஆனது. நடிகராக வேண்டும் என்கிற முடிவில் சென்னை வந்த எஸ்.ஜே.சூர்யாவுக்கு பல வருடங்களுக்கு பின்னரே தனது நடிப்பு திறமைய காட்டும் வாய்ப்பு கிடைத்தது. மெர்சல் போன்ற படங்களில் அவரின் நடிப்பு இயக்குனர்களுக்கு பிடித்துப்போக தொடர்ந்து வில்லனாக நடிக்க துவங்கினார்.

ஒருபக்கம் மான்ஸ்டர் போன்ற படங்களிலும் ஹீரோவாக நடித்தார். அவரின் நடிப்புக்கு தீனி போடும் வேடங்களும் கிடைத்தது. அதில் ஒன்றுதான் மாநாடு திரைப்படம். இந்த படத்தில் அவரின் நடிப்பை பார்த்து பலரும் பாராட்டினார்கள். அதன்பின், கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் வெளிவந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திலும் சிறப்பாக நடித்திருந்தார்.

அந்த படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினி எஸ்.ஜே.சூர்யாவை நடிப்பு அசுரன் என பாராட்டினார். அதன்பின் இந்தியன் 2 உள்ளிட்ட பெரிய படங்களில் நடிக்க துவங்கினார் எஸ்.ஜே.சூர்யா. இப்போது தவிர்க்க முடியாத நடிகராக மாறிவிட்ட எஸ்.ஜே.சூர்யாவுக்கு தெலுங்கிலும் வாய்ப்புகள் வருகிறது.

ஞானியுடன் இணைந்து சூர்யாவின் சனிக்கிழமை என்கிற படத்திலும் நடித்தார். இந்த படத்தில் ஞானியை விட எஸ்.ஜே.சூர்யா நடிப்பு நன்றாக இருப்பதாக விமர்சனம் வந்தது. இந்நிலையில், லப்பர் பந்து படத்தில் அட்டக்கத்தி தினேஷ் நடித்த வேடத்தை மிஸ் செய்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

இயக்குனர் கதை சொன்னதும் 7 கோடி சம்பளம் கேட்டிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. அதன்பின் ‘இப்போது சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறேன். இந்த படத்தில் கதாநாயகிக்கு அப்பா என்றால் என் இமேஜ் பாதிக்கும்’ என சொல்லி நடிக்க மறுத்துவிட்டாராம். அதன்பின்னரே தினேஷ் நடிக்க வந்திருக்கிறார். இந்த படம் மூலம் தினேஷுக்கு நல்ல பெயர் கிடைத்திருக்கிறது. அவரை அட்டக்கத்தி தினேஷ் என சொன்னவர்கள் இப்போது கெத்து தினேஷ் என அழைக்க துவங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.

Related Articles
Next Story
Share it